Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, November 14, 2008

டாஸ்மார்க் காதலர்கள்

காதலிகளே உங்களை பற்றி எழுதத்தான் எத்தனை கவிஞர்கள்
மாநகராட்சி கழிவரை தொடங்கி
மயான கல்லறை வரை
அப்படி இருந்தும்

இன்னமும்
எத்தனையோ கவிஞர்கள்
சவரம் பண்ணாத முகத்துடன்
டாஸ்மார்க் கடைகளில் !

Saturday, October 25, 2008

தூக்கம் தொலைத்த இரவுகள்

எத்தனையோ
தூக்கம் தொலைத்த இரவுகளில்
நேற்று இரவும் ஒன்று
எப்படி புரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை
இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்று வறை நான்
தொலைத்தது கணக்கில் அடங்காதது
ஆனால் தூக்கத்தை
எங்கு தொலைத்தேன்
எப்படி தொலைத்தேன்
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் அந்த இரவில்
தூக்கத்தை தேடுவது என்பது
மூக்கனாங்கயிறு
இல்லாத முரட்டு காளையை
அடுக்குவது போல்
இதில் பல சமையம் குத்துப்பட்டு
தோற்று விடுகிறேன்

Saturday, October 11, 2008

என் பள்ளி தோழன் ..

எலிமெண்டரி ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் எல்லாம் சக மாணவிகள் மட்டும் .

ஹை ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் அனைவரும் காதலிகளாக தெரிந்தீர்கள் .

கல்லூரி பருவத்தில்

நீங்கள் எல்லாம் தோழிகளாக தெரிந்தீர்கள் .

உடன் பணி புரியும் பொழுது

நீங்கள் எல்லாம் சக மனிதர்களாக மட்டும் தெரிந்தீர்கள் .

என் திருமணத்திற்கு பிறகு

சிலர் தோழி ஆனார்கள்

சிலர் சகோதரி ஆனார்கள் .

ஆனால் அன்று முதல் இன்று வரை

எனக்கு மாமன் மச்சானாகவே இருக்கிறான்

என் பள்ளி தோழன் ..

Friday, September 26, 2008

NRI வாழ்க்கை

முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் குழந்தையும்
விடுமுறைக்காக தாயகம் சென்று வரும் NRI யும் ஒன்றுதான் !

ஒரு ஒற்றுமை " பிரிவு "
ஆனால் ஒரு சிறு வேறுபாடு

ஒருவரின் பிரிவு மணிகணக்கில்
மற்றொருவரின் பிரிவு வருடகணக்கில்

ஒருவர் வாழ்க்கையை தொடங்குகிறார்
மற்றொருவர் வாழ்க்கையை தொலைக்கிறார்

குழைந்தையின் தேடல் மகிழ்ச்சி
NRI யின் தேடல் பணம் , பதவி , பெருமை !
இதற்க்கு முக்கிய காரணம் கடமை
அந்த கடமையின் விளைவு

தந்தை முகம் மறந்த குழந்தைகள்
பிள்ளை முகம் பார்க்க ஏங்கும் தந்தை ..

பிரிவின் வலி உனக்கு மட்டும் இல்லை
எனக்கும் தான் என்று அறுதல் கூறும் மனைவி

என்ன ஒரு வாழ்க்கை என்று நினைக்கும் போது
கண்முன் வது நிற்கும் அந்த கடமை ..

இப்படி நாட்கள் நகர்ந்தது
மாதங்கள் கடந்து
வருடங்கள் ஓடின ..

ஆனால் வாழ்க்கை மட்டும்
ஒரே இடத்தில் சம்மணம் கால் போட்டு அமர்ந்தது !!

நன்றாக படிக்காதவன் எல்லாம்
நிம்மதியாக உள்ளுரில் இருக்கிறான்..

படித்த காரணத்தால் ,
தாய் தந்தை விட்டு ,
சகோதர சகோதரிகளை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
பழகிய நண்பர்களை விட்டு
அந்நிய தேசத்தில் அனாதைகள் ஆனோம்

இதையே உள்ளுரில் இருப்பவனிடம் சொன்னால்
அட போட .. உள்ளுரில் இருந்து
என்ன சுகத்தை கண்டோம் என்றான்
" இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை "
மனதை தேற்றிக்கொள்ள அருமையான வார்த்தை

Wednesday, September 17, 2008

என் வாழ்க்கை -- காலை மாலை இரவு

காலை
செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது
ஒவ்வொரு நாளும்

வாழ்க்கை எங்கே செல்கிறது
என்று தெரியவில்லை ஆனால்,
கால்கள் மட்டும்
என் அலுவலகம் செல்கிறது

சிறிதுநேரத்தில்
என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து
முகம் தெரியாத முதலாளியின்
கனவை
நினைவாக்க சென்று விடுகிறேன் ...

மாலை
பல நாட்களில்
மணி ஆனது தெரியாமல்
moniter யிடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..

இரவு
வீடு திரும்பும்போது
மீண்டும் வாழ்க்கை பற்றிய சிந்தனை ..
அதற்குள் எனக்குள் தூங்கிக்கொண்டு
இருந்த லக்சிய சித்தனும்
கொள்கை கோமாலியும்
என் முன் சென்று
என்னை மானம் கெட திட்டுவார்கள்
அதற்குள் வீடு வந்து விடும்

சிறிது நேரத்தில்
உணவு அருந்திவிட்டு உறங்க சென்றால் ,
மற்றும் சிறிது நேரத்தில்
செல் போன் சிணுங்க தொடங்கும்
அடுத்த நாள் காலையில் ....

Thursday, September 11, 2008

என் உயிர் காதலி

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் மாமன் மகன்

Tuesday, September 9, 2008

காதலி







எனக்குள் நீ

உனக்குள் நான்

என்றும்.


என்றும்

எனக்கு இருக்கும்

ஒரே பதவி

உன் காதலன்

Sunday, August 24, 2008

கல்லூரி காதல்




கல்லூரி வகுப்பறை சொல்லிக்கொடுத்த பாடத்தை விட
கல்லூரி வாசல் டீ கடையில் பாடங்கள் பல படித்தேன்

நம் வகுப்பரையின்
வண்ணத்துப்பூச்சி நீ அல்லவா !

கல்லூரிக்கு என்றாவது ஒரு நாள் வரும் என்னை
Assignment க்காக வெளி அனுப்பும் பொழுது
அப்பாவியாக பாவம் என்பாயே !

கல்லூரியே கலைந்த பின்னும்
Extra லேப் என்று உன் தோழிகளிடம் சொல்லிவிட்டு
எனக்காக காத்திருப்பாயே !

நம் கல்லூரி corridor சொல்லும் நாம்
கடலை போட்ட நாட்களை !

காலங்கள் நம் காதலை சொல்லும் என்று
கல்லூரி மரக்கிளையில்
நம் பெயரை எழுதினாயே !

நண்பர்கள் கேலி செய்தாலும்
பொதி சுமப்பது போல்
உன் புத்தகங்களை
எடுத்து வர செய்தாயே !



நம் கல்லூரி அதிசயத்தில் ஒன்று
நான் arrier இல்லாமல் பாசவுவது
அதற்க்கு முக்கிய காரணம் நீ தான் என்று யாருக்கு தெரியும் !


இப்படி !!

வலிய வந்தாய்
வாழ்கையே நீ தான் என்று உணரும்முன்
வலியை மட்டும் விட்டு சென்றாய் !

என் உயிர் நீ தான் என்றாய் ! ஆனால்
உயிரை விட்டு பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது

Friday, August 22, 2008

நான் தான் உன் காதலன்



உன்னை நான் காதலிக்கி்றேன் என்றேன்
காதலித்துகொள் என்றாய் !!

அன்று முதல் இன்று வரை உன்னை காதலிக்கி்றேன்
ஆனால் என்று தான் நீ என்னை காதலிப்பாயோ ?

காலங்கள் போகுதடி கண்மணி
நான் கிழவன் ஆவதற்க்குள் சொல்லி விடு
நான் தான் உன் காதலன் என்று

Thursday, July 17, 2008

நீயும் பித்தன் தான் ..

தனியாக சிரித்தேன்
ரசித்தேன்
தவித்தேன்
பேசினேன்
பாடினேன்
சிந்தித்தேன்
இதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு சித்தன் என்று !!



கவிதைகள் எழுதினேன்
கட்டுரைகள் எழுதினேன்
அதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு கவிஞன் என்று !!

உண்ண மறந்தேன்
உறங்க மறந்தேன்
உடுப்பை மறந்தேன்
இருப்பிடம் மறந்தேன்
நான் யார் என்பதையும் மறந்தேன்
அதை கேட்ட ஒருவன் சொன்னான்
நான் பைத்தியம் என்று !!


காதலிக்க தெரியாதவர்கள் ?


காதலிக்க கற்றுக்கொள் உனக்குளும்
ஒரு கவிஞனும்!
ஒரு சித்தனும்!
ஒரு பைத்தியகாரனும்!
இருக்கிறான் என்பதை நீ உணர்வாய் ....

Tuesday, July 8, 2008

வலி

ஒரு முறை நான் என்னுடன் பணி புரியும் ஒரு நண்பரேடு பேசிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் எனக்கு தெரியும் அவர் பாலஸ்தீனம் என்று , பாலஸ்தீன பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ள அவர் இடம் பேசி கொண்டு இருந்தேன் , அப்பொழுது தான் எனக்கு புரிந்தது புலம் பெயர்ந்தவர்களின் வலி என்னவென்று . அந்த வலியின் சில வார்த்தைகள்




தேசம் விட்டு தேசம் பறக்கும்
பறவைகள் நாங்கள்
இறை தேடி அல்ல
வாழ்கையை தேடி !!!



தாய் வீடு திரும்பும் எங்களுக்கு பெயர்
அகதிகளா !!!



இறைவா உன்னை தான் கேட்கிறேன்
உனக்கு மறதி அதிகமோ


எங்கள் நாட்டில் நாங்கள் வாழ எங்களுக்கு
அனுமதி மறுக்கபபடுவதை
மறந்துவிட்டாய் !


நீ படைத்தது ஒரு முறை தான்
ஆனால் தினமும் நாங்கள் இறக்கிறோமெ
அதையும் தான் நீ
மறந்துவிட்டாய் !

இப்படி நீ உன் பல கடமைகளை
மறந்தாலும் எங்களால்
உன்னை மறக்க முடியவில்லை

Friday, April 18, 2008

ஏன் இந்த பெயர் அப்பா !!!!

ஏன் இந்த பெயர் அப்பா !!!!



காதலை செல்ல காலம் பார்த்தேன் , ஆனால்
காலம் காதலை காலவதியாக்கியது
காலவதியான காதலுக்கு
கல்லறை வைக்க மனமில்லை
காலம்மெல்லம் நினைத்திருக்க
கன்மனியே உனக்கு வைத்தேன் , அந்த
காவிய பெயரை.
எழில் !!!!