வணக்கம் மக்களே ...
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என் ப்லோக் பக்கம் வருகிறேன் ..ஒரு 20 நாள் பயணமாக ஊருக்கு சென்று இருந்தேன் நேற்று தான் அபு தாபி திரும்பினேன் ..இது ஒரு நல்ல இனிமையான பயணமாக அமைந்தது .பயணத்தின் சுவாரசியம் என்ன என்றால் , இந்த முறை அப்பா அம்மா விடம் சொல்லாமல் சென்றேன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று ஆனால் ,சென்னை விமான நிலையத்தில் இறங்கிய வுடன் ஒரு 1000 வாட்ஸ் பல்பு ஆகிவிட்டது எனக்கு . என்ன என்றால் என் பொட்டி படுக்கைகள் எல்லாம் வரவில்லை ...அட போங்க டா என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு சென்றேன் அடுத்த நாள் இரவு ஒரு விமானத்தில் வந்து சேர்ந்தது பிறகு அதை வாங்கிக்கொண்டு அடித்து பிடித்து அடுத்த நாள் ஊரு போய் சேர்ந்தேன் .ஈரோடு போய் சேர இரண்டு நாள் ஆகிவிட்டது
என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் திட்டும் விழுந்தது , மற்ற படி மிகவும் அருமையான பயணமாக அமைந்தது .இருந்தும் எப்பவும் போல் பல நண்பர்களை பார்க்க முடியவில்லை . பெங்களூர் செல்லலாம் என்று இருந்தேன் . கடைசி நிமிடத்தில் முடியவில்லை .. ஜூன் மாதத்தில் சகோதரர் திருமணம் அதற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதிக நேரம் பொட்டி தட்ட வேண்டும் .
கட முட கட முட ....