Monday, June 21, 2010

ராவணன்

பல தமிழ் நடிகர்கள் நடிப்பதால் அது தமிழ் படம் என்றால் ஆம் ராவணன் தமிழ் படம் தான் . ஆனால் தமிழிற்கு உண்டான சாயல் எதுவும் இல்லாமல் .



• சகிக்க முடியாத வசனம் ,

• பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பதாலும் , பல மொழி படங்களை பார்ப்பதாலும் சினிமா அறிவு வந்து விடாது என்பதற்கு சுகாசினி ஒரு உதாரணம் . மத்த படங்களை எல்லாம் விமர்சனம் செய்யும் உங்களுக்கு , இந்த படம் எப்படி

• திருநெல்வேலியில் எங்கே வனப்பகுதி

• திருநெல்வேலியில் எங்கே படத்தில் வருவது போல கோட்டைகள்

• பழங்குடி மக்களை இதை விட கேவலமாக காட்ட முடியாது அபோகலிப்டோ [Apocalypto] என்ற ஒரு படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மிக அருமையாய் காட்டி இருப்பார்கள் , அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் , கொஞ்சமாவுது உண்மை இருந்து இருக்கலாம்


விக்ரம் - கடந்த மூன்று படங்களை போல் , மொக்கை படத்தில் நல்ல நடிப்பு


ஐஸ் - அழகான ஒரு பெண்ணை எப்படி சொல்வது - அழகு

கார்த்திக் - பாவமான கோமாளி .

பிரித்விராஜ் - கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்

பிரியாமணி - முத்தழகு , அட நெசமா அதே நடிப்பு , அதே பாத்திரம்


மணிரத்தினம் படம் பார்ப்பது நான் மணிரத்தினம் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது , பல மக்களுக்கு ஒரு பெருமை , அல்லது social status என்று நினைக்கு அவாளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல படம் .. ஆனால் உண்மை அதுவல்ல

என்னை பொறுத்த வரையில் இந்த படமும் ஆயிரத்தில் ஒருவணும் ஒன்று தான் . ஆனால் ஏன் விமர்சகர்களும் , பத்திரிக்கைகளும் , இதை சொல்லவில்லை என்று விழங்கவில்லை , பிறகு தான் எனக்கு விழங்கியது , அவாள் எல்லாம் ஒரு இனம் என்று  , தமிழ் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு மொக்க படம் தான் , வட இந்திய ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை

படத்தை தாங்கி நிற்ப்பது , ஒளிப்பதிவு மற்றும் படம் உருவாக்கப்பட்ட இடங்கள்