Friday, October 16, 2020
Sunday, November 17, 2013
Loneliness
Friday, September 2, 2011
My View about writing reviews
Now a day’s many of the reviewers they doesn’t know the back drop and just start writing because they got the free Blog or forum , office internet and computer . Then I realized when these things become money most of these reviews will vanish . I had did an small study on this blog and other online community , I had put forwarded few questions like
How do you know about blog ? and why you started blog ?
Most of the answer was my friend had introduced me to blog and then I just started
Whether you will do blogging when it become paid service ?
The answer is as expected , NO. because I am writing just of time pass , for that why should I waste money
Do you have internet and personal computer ?
This is somewhat ok , the answer is “Ya I have “ , in that few have only computer and no internet .
So the Conclusion , Office is the main place of the bloggers , they are blogging because its free . it’s not their problem also its our hereditary problem . we are selling our vote of color TV (Even though we have LED TV in home ) , fridge , mixer and that goes on.. why not free blogging …
You might think what this idiot is writing like this . the reason is I had been trying to make an short film for the past 2 years which I cont make it I realized the pain behind , so guys before writing or commenting about the movies at least read some books about the movie making [paid service ] , online articles [free service ] . After reading , if you still feels you are brilliant in making movies then start writing .
Cheers !
Thursday, July 1, 2010
Is that foreplay
Monday, June 21, 2010
ராவணன்
• சகிக்க முடியாத வசனம் ,
• பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பதாலும் , பல மொழி படங்களை பார்ப்பதாலும் சினிமா அறிவு வந்து விடாது என்பதற்கு சுகாசினி ஒரு உதாரணம் . மத்த படங்களை எல்லாம் விமர்சனம் செய்யும் உங்களுக்கு , இந்த படம் எப்படி
• திருநெல்வேலியில் எங்கே வனப்பகுதி
• திருநெல்வேலியில் எங்கே படத்தில் வருவது போல கோட்டைகள்
• பழங்குடி மக்களை இதை விட கேவலமாக காட்ட முடியாது அபோகலிப்டோ [Apocalypto] என்ற ஒரு படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மிக அருமையாய் காட்டி இருப்பார்கள் , அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் , கொஞ்சமாவுது உண்மை இருந்து இருக்கலாம்
விக்ரம் - கடந்த மூன்று படங்களை போல் , மொக்கை படத்தில் நல்ல நடிப்பு
ஐஸ் - அழகான ஒரு பெண்ணை எப்படி சொல்வது - அழகு
கார்த்திக் - பாவமான கோமாளி .
பிரித்விராஜ் - கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்
பிரியாமணி - முத்தழகு , அட நெசமா அதே நடிப்பு , அதே பாத்திரம்
மணிரத்தினம் படம் பார்ப்பது நான் மணிரத்தினம் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது , பல மக்களுக்கு ஒரு பெருமை , அல்லது social status என்று நினைக்கு அவாளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல படம் .. ஆனால் உண்மை அதுவல்ல
என்னை பொறுத்த வரையில் இந்த படமும் ஆயிரத்தில் ஒருவணும் ஒன்று தான் . ஆனால் ஏன் விமர்சகர்களும் , பத்திரிக்கைகளும் , இதை சொல்லவில்லை என்று விழங்கவில்லை , பிறகு தான் எனக்கு விழங்கியது , அவாள் எல்லாம் ஒரு இனம் என்று , தமிழ் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு மொக்க படம் தான் , வட இந்திய ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை
படத்தை தாங்கி நிற்ப்பது , ஒளிப்பதிவு மற்றும் படம் உருவாக்கப்பட்ட இடங்கள்
Thursday, April 22, 2010
Balleilakka
We should give a big applause to ARR, for making some white’s to singing our Tamil song, and the good things is they are singing far better than (in some part of song) the native tamil singers. Now I can understand the reach of Oscar awards. Great work ARR ,
JaiHo
Singers :
Composer: A. R. Rahman, arr. Ethan Sperry From the film Sivajii Brantley Crank, Julia Steinbach, & Jade Victoria, soloists Performed by Miami University Collegiate Chorale, April 10, 2010 at Hall Auditorium Conductor: Ethan Sperry
Monday, May 4, 2009
அரசியல் - தீவிரவாத தொழில்சாலை
இதற்கு நடுவில் டாக்டர் காலை உணவு உன்ன வேண்டாம் என்று சொன்னதை .. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று மெரினாவில் வந்து அமரும் தலைவன்
ஈழம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மாதிரி தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் தலைவி ..
இந்த ராமதாஸு சரியான பச்சோந்தி, அவன மாதிரி ஒரு பொறம்போக்கை பார்க்கவே முடியாது , கடைசி நாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள் அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பார்களாம் அதையும் நாம் நம்பனும் பன்னாடை ..
இதற்கு நடுவில் சினிமா காமடியன்கள் வேறு [கார்த்திக் ,மன்சூர் அலி கான் , TR, சரத், விஜயகாந்த் அட நாம்ப ரித்திஷ்].. இந்த கேவலம் நம்ப ஊரில் என்றால் வடக்கே இதை விட கொடுமை ..
இங்கிலீஷ் வேண்டம் என்கிறான் ஒருத்தன் ..
இரண்டு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி என்கிறான் ஒருத்தன் . எற்கனவே தமிழ் நாட்டில் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கியாச்சு தேசம் முழுவதையும் கெடுத்துவிடலாம் என்று ஆசை போல
அட நம்ப நக்மா எல்லாம் election நிக்குதாம் நாடு உருப்பட்ட மாதிரித்தான்
அதை விட கொடுமை என்ன என்றால் இவனுக காட்டி இருக்கும் சொத்து மதிப்பை பார்த்திங்களா .. பன்னாடைக 60000 கோடி 40000 கோடி என்று சுருட்டிவிட்டு மூன்று கோடி நாலு கோடி என்று கணக்கு காட்டறாங்க.. இன்னமும் என்ன கொடுமை என்றால் அதையும் நம்ப election commission நம்புவது ,,
என்ன இவனுக எல்லாம் என்ன நினைக்கிறாங்க மக்கள் எல்லாம் கேனப்பசங்க என்றா . இல்லை இவனுக ரொம்ப நல்லவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க என்றா .. போங்க டா பொறம்போக்குகளா ....
இந்த மாதிரி கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் தீவிரவாதிகளும் naxlites களும் உருவாகுகிறார்கள் என்று நினைக்கிறேன் . இந்த மாதிரி சம்பவங்களை பார்க்கும் பொழுது நம்மில் பலருக்கு கடும் கோபம் வரும் ஆனால் என்ன நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக்கொண்டு சும்மா நம் வேலையை பார்க்க போய்விடுகிறோம் , வேலையே இல்லாதவன் என்ன செய்வான் இடுப்பில் குண்டை கட்டிக்கொண்டு தான் திரிவான் ..
நாம் தேசம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வரும் சிந்தனை அவர்களுக்கு கொஞ்சம் கூட வராத ..
பன்னாடை பசங்க இவளவு கொள்ளை அடித்து என்ன பண்ண போறாங்க . என்ன கருமமோ போங்க .. ஒரே கோபம் நாம் ஊர் செய்தியை படித்தால் அது தான் இந்த பதிவு
Wednesday, April 8, 2009
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என் ப்லோக் பக்கம் வருகிறேன் ..ஒரு 20 நாள் பயணமாக ஊருக்கு சென்று இருந்தேன் நேற்று தான் அபு தாபி திரும்பினேன் ..இது ஒரு நல்ல இனிமையான பயணமாக அமைந்தது .பயணத்தின் சுவாரசியம் என்ன என்றால் , இந்த முறை அப்பா அம்மா விடம் சொல்லாமல் சென்றேன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று ஆனால் ,சென்னை விமான நிலையத்தில் இறங்கிய வுடன் ஒரு 1000 வாட்ஸ் பல்பு ஆகிவிட்டது எனக்கு . என்ன என்றால் என் பொட்டி படுக்கைகள் எல்லாம் வரவில்லை ...அட போங்க டா என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு சென்றேன் அடுத்த நாள் இரவு ஒரு விமானத்தில் வந்து சேர்ந்தது பிறகு அதை வாங்கிக்கொண்டு அடித்து பிடித்து அடுத்த நாள் ஊரு போய் சேர்ந்தேன் .ஈரோடு போய் சேர இரண்டு நாள் ஆகிவிட்டது
என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் திட்டும் விழுந்தது , மற்ற படி மிகவும் அருமையான பயணமாக அமைந்தது .இருந்தும் எப்பவும் போல் பல நண்பர்களை பார்க்க முடியவில்லை . பெங்களூர் செல்லலாம் என்று இருந்தேன் . கடைசி நிமிடத்தில் முடியவில்லை .. ஜூன் மாதத்தில் சகோதரர் திருமணம் அதற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதிக நேரம் பொட்டி தட்ட வேண்டும் .
Friday, January 9, 2009
பிரிவு
இப்படி பட்ட சூழலில் பிரிவால் வாடுபவர்களுக்கு தொலைபேசியில் துக்கம் விசாரிப்பது என்பது அதை விட கொடுமை . கண்ணிரால் சொல்ல வேண்டிய வலியை வார்த்தையால் சொல்ல முடியாது , சொல்லவும் வார்த்தை வராது , நம் வருத்தத்தை வெளிபடுத்த முடியாத வலி அதை விட ரொம்ப கொடுமை
கண்ணிர் துளி ஒன்று
நாக்கில் பட
சீசீ ஒரே உப்பாக இருக்கிறது
என்றதாம் நாக்கு
அதற்கு கண்கள் சொன்னதாம்
அது தான் என்னிடம் இருந்த
கடைசித்துளி என்றதாம்
பாளைவனத்தில் பயணிக்கும் ஒரு
வழிப்போக்கனின் கண்கள்
இப்படி தான் நம்மில் பலரின் நிலைமை .. ஆறுதல் என்று நாம் சொல்லும் வார்த்தைகள் . நாக்கில் பட்ட கண்ணிர் துளி ஆகி விடக்கூடாது. என்ற பயத்தில் நான் அவர்களை அழைக்கவே மிகவும் தயங்குகிறேன் அதையும் மீறி அழைத்தாலும் வார்த்தைகளை தேடுவதில் போய்விடுகிறது
வார்த்தைகள் தேடுகிறேன்
வலியை சொல்ல
வழி ஒன்றும் தெரியவில்லை
என் கண்ணிர் கதை சொல்ல !
ஓடி வரும் தூரத்தில் நானும் இல்லை !
ஓ என்று அழவும் யாரும் இல்லை !
இப்படி பல தருணங்களில் தேடுகிறேன்
என் வாழ்க்கை பயணத்தை ..
Sunday, December 28, 2008
மீண்டும் இம்சை ஆரம்பம்
Friday, November 14, 2008
டாஸ்மார்க் காதலர்கள்
மாநகராட்சி கழிவரை தொடங்கி
மயான கல்லறை வரை
அப்படி இருந்தும்
இன்னமும்
எத்தனையோ கவிஞர்கள்
சவரம் பண்ணாத முகத்துடன்
டாஸ்மார்க் கடைகளில் !
கேட்டதில் ரசித்தது ராசு -4
வெற்றி கொடிகட்டு வடிவேலு மாதிரி ஊருக்குள் சுத்திக்கொண்டு இருந்தான் , அவன் எந்த வீட்டு விசேசத்திற்கு சென்றாலும் ஒரு மனம் அவனை தொடர்வது போல் உணர்ந்தான் .ஆனால் அது என்ன என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை ,ஆனால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட மனமாக இருந்தது .
அப்படி தான் ஒரு நாள் தங்கள் உறவினர் வீட்டு திருமனத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிக்கொண்டு இருந்தான் , வழக்கம் போல் அவன் மனைவி அலங்காரம் பண்ணிக்கொண்டு வருவதற்குள் போது போதும் என்று ஆகிவிட்டது
"அடியே என்ன டி பண்ற அங்க .."
"எங்கனா போறதுனா சட்டுப்புட்டுன்னு கெளம்பறது இல்லை .. சிக்கிரம் வா"
"ஏயா கத்தற "
"கெளம்ப வேண்டாமா " என்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய செண்டு எடுத்து அடித்துக்கொண்டால்
அதை பார்த்த ரசுவிர்கு பகிர் என்று இருந்தது ..
“அடியே என்ன டி பண்ற !!!!! ……… “
“அதை ஏன் டி எடுத்து அடிக்கிற “..
அவன் கேட்பது அவள் காதில் விழுவதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு இருந்தால் ..
“அடியே உன்னை தான் டி அதை எதுக்கு டி அடிக்கிற அந்த சின்ன பாட்டில் எல்லாம் எங்க , அதை என்ன பண்ணின “
“அந்த சின்ன பாட்டில் எல்லாம் பக்கத்து விட்டு அக்காவுக்கு கொடுத்துட்டேன்”
“அதை ஏன் டி கொடுத்த “
“அந்த அக்கா கேட்டுக்கிடே இருந்தாங்க அது தான் கொடுத்தேன் “
“ஐயோ ..பன்னாடை பன்னாடை “
“ஏயா என்னை திட்டற ..”
“கொடுத்தது தப்பு இல்லை ..ஆனா அதை ஏன் டி கொடுத்த ,”
“ மத்தது எல்லா சின்னதா இருந்தது அது தான் பெருசை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு , சின்ன பாட்டில் எல்லாம் அவுங்களுக்கு கொடுத்தேன் “
“அது இல்லை டி அது தான் செண்டு இது வீட்டிற்கு அடிக்கிற ரூம் ஸ்ப்ரே இதை friend ஒருத்தன் சும்மா கொடுத்தான் "
“எனக்கு என்ன தெரியும் இது எல்லாம் நீ தான் சொல்லி கொடுக்கணும்..”
இந்த சம்பவத்திர்க்கு பிறகு மனிதர் யார் ஒசியில் எது கொடுத்தாலும் அது அவனுக்கு பயன் படவில்லை என்றால் அதை வாங்க மாட்டான் .
Thursday, November 6, 2008
வெள்ளை பன்றிகளும் வெட்டி பேச்சும் ...
அதை கேட்டதும் எங்களுக்கு கடுப்பாகியது , போட ங்கோ _ _ என்று தான் முதலில் சொன்னேன் , அதன் பிறகு தான் அது வெள்ளை பன்றி என்று சுதாரித்துக்கொண்டு , அவன் சொன்ன வார்த்தையை கொஞ்சம் மாற்றி , நடு விரலை காட்டி U அம்மா F என்ற வார்த்தையை சொன்னேன் .
அவன் கடுப்பாகி இறங்கினான் நானும் என் நண்பரும் அவனிடம் சென்றோம் ,, பன்னாடை புல்லா குடித்திருந்தான் , அது மட்டும் இல்லாமல் சைடு பிட்டிங் வேறு .
அடிடா சக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது ...ஐயொ மக்களே நீங்க தப்ப நினைக்க வேண்டாம் , இங்கு அப்படி இருந்தால் நான் போலீஸ் யில் கம்ப்ளைன்ட் பண்ணினால் அவன் வசமாக மட்டிக்கொள்வான் , அதனால் நானும் எகிறினேன் .சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் வந்து எங்களிடம் மனிப்பு கேட்டு . அவனை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டர்கள் . நாங்களும் போன போகிறது என்று சொல்லி விட்டு விட்டோம் .
இதில் பாருங்க நானும் ஆங்கில படம் பார்க்கும் பொழுது எல்லாம் அதில் வரும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்து இருந்தேன் ஆனால் பாருங்கள் அவனை திட்டும் பொழுது எனக்கு பாதி வார்த்தை மறந்து போய்விட்டது . ஏன் என்றால் ஆங்கிலத்தில் திட்டுவதற்கு என்றைக்காவுது ஒரு நாள் தான் இந்த மாதிரி கிடைப்பார்கள் அதையும் நழுவ விட்டு விட்டால் .. என்ன பண்ணுவது . நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் ஹீரோ ஒருவனை , வித்தியாசமாக திட்டினான் . அடுத்த முறை எவனாவுது கிடைத்தால் அவனுக்கு அந்த வார்த்தை தான் :)
Tuesday, November 4, 2008
பிளாக்கர் பொலிடிக்ஸ் ..
நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது
பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை
ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .
நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்
கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)
அபுதாபியில் இந்திய திரைப்பட விழா
Saturday, November 1, 2008
ஏகன்
மே ஹூ நா என்ற ஹிந்தி படத்தின் காப்பி தான் ,, ஆனால் அட்டர் காப்பி இல்லை என்று சொல்வதற்காக , படத்தை சொதப்பி இருக்கிறார்கள் ,
அஜித்
ஸ்மார்ட் , ஸ்டைல் டான்ஸ் எல்லாம் ஓகே ஆனால் படத்தில் அங்கங்கே சொதப்பல் .அது அஜித்தின் தவறு கிடையாது , ஆனால் கதை தேர்வு செய்யும் பொழுது தல கொஞ்சம் கவனம் தேவை .. அவன் அவன் ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக டைரக்டர்க்கு சான்ஸ் கொடுக்க தயங்கும் பொழுது நீங்கள் மட்டும் தயங்காமல் சான்ஸ் கொடுப்பது அருமை தான் ஆனால் அவர்கள் சொதப்பினால் சேதாரம் உங்களுக்கு தான் அதிகம் .பார்த்துக்கொள்ளுங்கள் ,இன்னமும் பில்லா body language யில் இருந்து வரவில்லை
நயன்தாரா
படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம் போல் தெரிகிறது .ஏன் என்றால் நயன்தாராவுக்கு அப்படி ஒரு துணி தட்டுப்பாடு இவருக்கு ஒரு இரண்டு மீட்டர் துணி எக்ஸ்ட்ரா எடுத்து கொடுத்து இருக்கலாம் .இவளவு செக்ஸ்சியாக ஒரு டீச்சர் தமிழ் படத்தில் இது வரை நான் பார்த்தது இல்லை .
மைனஸ்
கிளைமாக்ஸ்
மொக்கை தனமாக போலீஸ் ஐ காட்டுவது
ஜெயராமின் மொக்கை காமடிகள்
பிளஸ்
தல அஜித்
தல அஜித்
தல அஜித்
செக்ஸ் பாம் நயன்தாரா
ராஜு சுந்தரம் ஐயா சாமி நீங்க டான்ஸ் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் , அப்படியும் முடியவில்லை என்றால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் ,கணக்கு பரீட்சையில் பார்முலா மற்றும் ஸ்டெப்ஸ்யை விட்டு விட்டு பிட்டு அடிப்பது போல் இருக்கு உங்கள் கதை .. ஐயா கணக்கு பரீட்சை என்றால் ஸ்டெப் மார்க்கும் இருக்கு மறந்து விடாதிங்க . அதனால் சரியாக காப்பி அடியுங்கள் வரும் காலத்தில் .
Friday, October 31, 2008
கரை தேடும் கப்பல்- 4
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் .
“அப்பா .. அப்பா “ என்றான்
“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..
இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..
.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..
“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..
“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .
“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...
தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு ..
"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...
"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி
"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "
"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "
"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "
"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்
சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....
பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்
“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று
உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார்
“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “
“எல்லாம் நல்ல இருக்காங்க ..”
“என்ன சாப்படறீங்க “
“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “
“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”
“வாங்க வாங்க எப்ப வந்திங்க “
“இப்ப தான்”
“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்
“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “
“அது வந்துங்க …..” என்று இழுத்தார்
“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “
“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “
“வந்து “
“அட சொலுங்க மாப்பிளை”
“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”
“அட அது தான் தெரியுமே .. “
“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “
“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “
“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”
காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”
காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் ..
இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா
இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்
ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .
ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..
அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .
“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .
“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள்
“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..
ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்
“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள்
நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது
மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்
அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்
ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது
வருடங்கள் காத்திருந்த பொழுது
இல்லாத வலி
இந்த நொடிகளில் அனுபவித்தாள்
மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது
கார்த்திக்கின் வீடு இன்று காலை .
பாகம் -2
வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....
ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...
பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..
“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...
“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற
“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “
“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்
இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...
Tuesday, October 28, 2008
பிச்சை எடுக்கும் அமெரிக்கா
இன்று காலை என்னால் தூங்க முடியவில்லை . ஐயா ஷேக் சாமி பிச்சை போடுங்க ஷேக் சாமி என்று அமெரிக்கர்களின் சத்தம் வலைகுடா எங்கும் கேட்டது . பேப்பரை பார்த்த பொழுது . அடி சக்க சந்தோஷமாக இருந்தது ஏன் என்றால் அமெரிக்கா வளைகுடா நாட்டிடம் பிச்சை கேட்டுள்ளது , இதற்கு ஒவ் ஒருத்தனும் எவளவு பிச்சை போட்டார்கள் தெரியுமா
saudi arabia - 2896
kuwait - 2136
uae - 8756
qatar - 506
oman -26
[எல்லாம் பில்லியன் டாலர்ஸ் ]இது தான் ஆசியாவின் பொற்காலம் இப்பொழுது முழித்துக்கொண்டால் தான் உண்டு . இல்லை என்றால் , இன்னமும் வரும் காலத்தில் நாம் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் . இங்கு UAE யில் டாலர் மதிப்பு எவளவு இருந்தாலும் இங்கு மட்டும் 1 Dollar = 3.65 AED தான் , இது UAE க்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒப்பந்தம் .
இங்கு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சதாம் உசேன்யை ஏன் அமெரிக்கா கொன்றது , இன்று ஏன் ஈரான் பக்கம் அதன் கவனத்தை திருப்புகிறது ,, ஏன் என்றால் இவர்கள் எண்ணை வர்த்தகத்தை euro விற்கு மாற்றினார்கள் அது தான் முக்கிய காரணம் , ஈரானில் kish என்ற ஒரு இடம் உண்டு இங்கு தான் euro வர்த்தகத்திர்காக ஒரு மிக பெரிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறது ஈரான். இது தான் அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம் .
இன்னோரு உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே . ஒரு நாட்டின் பணவீக்கம் அதன் தங்கத்தின் கை இருப்பை பொருத்து தான் என்பது அனைவருக்கும் தெரியும் , இன்று நம்ப ஊரில் ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா , தங்கத்தை வெளிட்டுள்ளது இந்த சூழ்நிலையை சமாளிக்க , ஆனால் அமெரிக்கா வில் இருப்பது எல்லாம் பேப்பர் கோல்ட் அதாவுது டாலர் தான் அது தான் இந்த பிரச்சனைக்கே காரணம்
என்னங்க பண்றது இங்கு இருக்கும் மக்களிடம் ஒற்றுமை இல்லை , அப்படி இருந்தால் . இந்த நுற்றாண்டு நாம் கைகளில்
தீபாவளி
இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்
மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .
புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .
ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .
என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .
ஒரு பிளாஷ் back .
பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..
அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..
கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..
ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "
