பல வருடங்கள் முன்பு நாங்கள் மூன்று நண்பர்கள் ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு , பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கையெந்தி பவனில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு நண்பார் எதுத்த மாதிரி இருந்த ஒரு மிக பெரிய மருந்து கடையை பார்த்து சொன்னான் மச்சி சரியான பிசினஸ் டா ..இங்க atleast ஒரு நாளைக்கு ஐம்பது ஆயிரம் பிசினஸ் நடக்கும் டா என்றான் .....
நானும் ஓஹோ ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு . omelet உண்பதில் மும்முரமாக இருந்தேன்...
இந்த நாண்பன் சொன்னதை சற்றும் கவனிக்காத இன்னொரு நாண்பன் சொன்னான்
இச்ச மக்களுக்கு எவளவு நோய் பாருடா ..
எவளவு மருந்து இதை அத்தனையும் நாம் தானே சாப்பிடுகிறோம் இச்ச பாவம் டா என்றான் ...
நான் அவனை சற்று வியப்புடன் பார்த்தான் !!
அப்பொழுது தான் "எல்லாமே நீ பார்க்கிற பார்வையில் தான் இருக்கு டா என்று என்றோ ஒரு நாள் யாரோ சொன்னது ஞபகம் வந்தது "
அது உண்மை தான் இப்பவும் பல சூல்நிலையில் எனக்கு இது உதவுகிறது
1 comment:
Good one:-)
Post a Comment