Friday, October 3, 2008

ராசு back to pavilion


இது ராசு திருமணத்திற்கு பிறகு முதல் முதலில் இந்தியா சென்ற பொது ..



முதல் கதையில் சொன்னது போல் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டான் , திருமனத்திற்கு பிறகு மூன்று வருடம் கழித்து இன்று தான் தாயகம் செல்கிறான் . மூன்று வருடமாக கடிதத்திலும் தொலைபெசியிலும் வாழ்ந்த வாழ்க்கையை உயிரோட்டமாக அனுபவிக்க செல்கிறான் , தான் பெற்ற மகனை முதல் முதலில் பார்க்க செல்கிறான் , இந்த பிரிவின் வலிகள் ராசுவை பல மடங்கு பக்குவம் ஆக்கியிருந்தது



இருந்தாலும் அனைவரையும் போல் ஆர்வ கோளாரில் அனைத்து பொருளையும் வாங்கினான் ..முக்கியமாக தன் மனைவிக்கு பிடித்த சென்ட் ,பவுடர் மற்றும் பல அழகு சாதன பொருள்கள் வாங்கினான் , தன் மனைவிக்கும் , மகனுக்கும் துணிமணிகள் என்று நினைத்ததையெல்லாம் வாங்கினான் , தான் கிளம்பும் நாளும் வந்தது . நண்பர்கள் படை சூழ வழி அனுப்பி வைக்கப்பட்டான் ராசு .



வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது எது வாங்குகிரோமோ இல்லையோ . நண்பர்களுக்கு மறக்காமல் சோம பாணம் வாங்கி கொள்ள வேண்டும் ,
தன் நண்பன் மொக்காசாமி சொன்னதும் ஞாபகம் வந்தது



"ஏலே ராசு வர அப்போ மறக்காம நல்ல பாரின் சரக்கு வாங்கிக்கிட்டு வலே மாப்பிளை "



செரி என்று Duty Freeல் ஒரு சோம பாணம் வாங்கிக்கொண்டு ,அனைத்து Immigration விசையங்களையும் முடித்துக்கொண்டு விமானத்தில் போய் அமர்ந்தான் .



விமானம் புறப்பட்டு தாயகம் நோக்கி பறந்தது .இந்த மூன்று வருட பிரிவின் வலியைவிட இந்த நான்கு மணி நேரம் பயணம் தான் , அவனுக்கு பெரும் சுமையாக இருந்தது .. உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் . [இதனால் ஒசியில் கொடுத்த சோம பானத்தை கூட குடிக்கவில்லை ]. இதே போல் ஒரு மனநிலையில் தான் ஒரு உள்ளம் திருச்சி விமானநிலையத்தில் காத்துகிடந்தது .



விமானமும் திருச்சியில் தரை இறங்கியது .. தனது பொருள்களை எடுத்துக்கொண்டு மற்ற Immigration விசையங்களை முடித்துக்கொண்டு வெளியே வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .. இந்த ஒரு மணி நேரத்தில் இந்த இரு உள்ளங்களும் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்ல முடியாது . இது எதுவும் புரியாத இந்த customs அதிகாரிகள் பண்ணும் இம்சை பெறும் தொல்லை ,



தூரத்தில் மகனையும் மனைவியையும் பார்த்த ராசு ஓடி வந்து தன் மகனையும் , மனைவியையும் வாரி அணைத்துக்கொண்டான் , அவனால் கண்ணிரை அடக்க முடியவில்லை ..அந்த நோடியில் , தான் பட்ட அத்தனை விலிகளும் கரைந்தது போல் உணர்ந்தான் ராசு ..அதன் பிறகு தான் மட்டற உறவும் நட்பும் அவன் கண்ணுக்கு தெரிந்தது



மகனின் முத்தமும்
மழலை பேச்சும்
அவனை கிறங்கடித்தது



பாலைவனத்தில் அவன் தொலைத்தது
வெறும் வருசங்கள் இல்லை
உயிரை என்று
அவன் மகன் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தமும்
மனைவியின் அரவணைப்பும்
அவனுக்கு சொன்னது

No comments: