Tuesday, October 21, 2008

பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடா

துபாய் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று .. இங்கு இருக்கும் தொழில் முறை circular flow எனலாம் ..முதலில் எண்ணையை கண்டு பிடித்தான் வெள்ளைக்காரன் . எண்ணை கிணத்தில் [Oil and chemical industry ] வேலை செய்ய வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்தார்கள் .. அவர்கள் தங்குவதர்காக வீடுகள் கட்டப்பட்டன [Real Estate industry ] இதனை நம்பி கட்டுமான துறை வளர்ந்தது [construction industry ] , இந்த மூன்று துறைகளையும் வளர்க்க உள் கட்டமைப்பு தானாக வளர்ந்தது [infrastructure industry]. இந்த நான்கையும் சுற்றி தான் இதர துறைகள் என்று இருந்தது 2000 வரை . இதில் எங்கு அடிவாங்கினாலும் அது மற்ற துறைகளையும் பாதிக்கும்

2000 த்திற்கு பிறகு .. துபாயை ஒரு வர்த்தக நகரமாக[Retail] மாற்ற நினைத்தார் துபாயின் மன்னர் .. அதன் விளைவு தான் துபாயின் இந்த அசுர வளர்ச்சி .. அதுவும் முக்கியமாக துறைமுகங்களும் , கட்டுமான துறை .

அதன் விளைவு .. வெள்ளையர்கள் இங்கு நிறைய முதலிடு செய்தார்கள் அதுவும் முக்கியமாக Real estate துறையில் . இன்று உலகையே ஆடவைத்திருக்கும் இந்த பொருளாதார புயல் துபாயையும் விட்டுவைக்க வில்லை .. அவர்கள் ஊரில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இங்கு இருந்த முதலிடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டார்கள் சில கம்பனிகள் .


சில கம்பனிகள் முதலிடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார்கள் அதன் விளைவு . Real Estate துறையில் பெரும் விழ்ச்சி .. துபாய் பங்கு சந்தியில் சென்ற வாரத்தில் மட்டும் ஒரே நாளில் 230 பில்லியன் டிர்தம்ஸ் நிஷ்டம் .அமெரிக்காவில் மூடப்பட்ட பல நிதி நிறுவங்களில் முதலிடு செய்தது எங்கு இருக்கும் ஷேக்குகள் தான் அதிகம் .

சென்ற மாத துவக்கத்தில் ஒரு டிர்தம்ஸ் 11.35 ரூபாய் யாக இருந்தது ஆனால் இன்று நாம் பணத்தில் மதிப்பு குறைந்து 13.15 யாக இருக்கிறது இது நம் நாட்டில் வீசும் பொருளாதார புயலும் தான் காரணம் . இண்ணமும் வரும் காலத்தில் அதன் மதிப்பு 15 யை தொட்டாலும் தொட்டுவிடும் என்று கூரப்படுகிறது .இது இங்கு வேலை செய்யும் NRI களுக்கு சந்தோஷமான விசையம் தான் . ஆனால் முதலிடு செய்தவர்களுக்கு இது ஒரு சொதனைக்காலம் தான் . இந்த பதிவை நான் ஏன் போட்டேன் என்றால் இன்று காலை பேப்பரை பார்த்தால் .. கூகிள் , யாஹூ மற்றும் ebay யில் layoff என்ற தகவல் ,இன்று இருக்கும் சூழ்நிலையில் வளைகுடா ஒரு பாதுகாப்பான இடம் தான் .. பார்ப்போம் வரும் கலாம் எப்படி இருக்கும் என்று. ஆனால் ஒரு நல்ல விசையம் என்ன வென்றால் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இங்கு layoff குரைவு தான் . அதற்க்கு முக்கிய காரணம் இன்னமும் ஒரு 50 வருடத்திற்கு இங்கு எண்ணை இருக்குமாம். அது ஒரு நிம்மதி பெருமூச்சு ...

2 comments:

Divya said...

Lucky you!

என் கற்பனை said...

என்னதான் பொருளாதார நெருக்கடி வந்தாலும் இங்குள்ள அரபிக்களுக்கு பிரச்சனை ஏதும் வராதுன்னு நான் நெனைக்கிறான், என்ன இங்குள்ள மக்கள் தொகைல முக்கால் விகிதம் மக்கள் வெளிநாட்டவர், மீதம் இருபத்தைந்து சத விகிதம் தான் இங்குள்ள குடி மக்களே, சோ அவர்களுக்கு தேவையான யாவற்றையும் செய்து தர இந்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. அதில்லாமல் இந்த அரசுக்கு பெட்ரோலிலிருந்து சம்பாத்த சேமிப்பு மிக நிறையவே உள்ளது எனவும் அதன் வட்டி பணத்தில் தான் இங்குள்ள கட்டுமானமே நடக்கிறது எனவும் பரவலாக பேச்சு, இது எந்த அளவுக்கு உண்மை என தெரியல, இது இப்படி இருக்க இவர்கள் இப்போது தான் உலக விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வ பட்டிருக்கிறார்கள், இப்போது தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள், அதில் பெண்களின் கல்வி மிக வளர்ச்சி கண்டுள்ளது, இது எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால் நான் கொஞ்ச நாள் விமான படை பள்ளியில் வேலை செய்தேன், அங்கு இவர்களுடைய வண்டவாளம் எல்லாம் தெரிய வந்தது, அங்கு கர்னல், கமண்டேர், என்றெல்லாம் சொல்லி கொள்வார்கள், ஆனால் கம்ப்யூட்டரில் எமெஸ் ஆபிஸ் கூட ஒழுங்காக தெரியாது, எல்லாமே நம்ம மலபாரிங்கதான் செஞ்சி கொடுப்பாங்க, அத வுட்டா பாகிஸ்தானிங்க, அப்புறம் தான் நான் கேள்வி பட்டேன், அமெரிக்காவுல இவங்க படிச்சாலும் படிக்காவிட்டாலும் சர்டிவிகட் தருவாங்களாம், சில யுனிவர்சிட்டில, இதுல இடையில பிரச்சனைய சந்திக்கறது நம்மள மாதிரி உள்ள வெளி நாட்டவர் தான், முஸ்லிம்கள் பிரச்சனை இல்லை, இங்க அவுங்களுக்கு இம்போர்டன்ட் குடுக்குறாங்க, திறமை இல்லாவிட்டலும் பரவாயில்லை, அதிகம் பாதிக்க படுவது உங்களை போல என்னை போலுல்லவர்கள் தான்.