நேற்று என் துறை தலைவரை பார்த்தேன் .. ஒரு 8 வருடத்திற்கு பிறகு .எனக்கு 1997 யில் இருந்து அவரை தெரியும் .. 2000 த்தில் நான் கல்லூரி [polytechnic ] முடித்த பொழுது .. எங்கள் கல்லூரி கடைசி நாள் அன்று அவரும் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .. அப்பொது அவரிடம் நாங்கள் கேட்ட பொழுது அவர் அதற்காண காரணத்தை சொல்லவில்லை .. சொந்த காரணம் என்று நினைத்துக்கொண்டோம் ...அதன் பிறகு 2003 வருடம் அவருடைய இன்னொரு நண்பர் மூலம் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிந்து கொண்டேன் அவருடைய ஈமெயில் முகவரியை வாங்கி .. மெயில் அனுப்பினேன் ஒரு மாதம் கழித்து ஒரு பதில் வந்தது .. அதன் பிறகு அவப்பொழுது அவரும் அழைத்தார்.. ஆனால் சந்தித்துக்கொண்டது இல்லை .. அதன் பிறகு 2005 சிங்கப்பூரில் இருந்து Australia சென்று விட்டதாக ஒரு நாள் அழைத்தார் .. நேற்று தான் அவரை துபாயில் சந்தித்தேன் ஒரு நாள் துபாயில் transit அவருக்கு . நேற்று முழுவதும் அவருடன் இருந்தேன் .. அன்று கண்டிப்பாண ஆசிரியர் இன்று ஒரு நல்ல நண்பர் என்று சொல்லாம் ..
துபாயில் இருப்பது ஒரு வசதி என் நிறைய நண்பர்களை இங்கு தான் transit யில் பார்ப்பேன் . நண்பர்கிளிடம் பேசுவதற்கு நிறைய இருக்கும் .. ஆனால் எதை பேசினாலும் கடைசியில் பேச்சு கல்லூரி வாழ்க்கையில் வந்து தான் நிற்கும் .. ஓவ் ஒருத்தனுடைய பட்டப்பெயரை சொல்லி அவன் எங்கு இருக்கான் இவன் எங்கு இருக்கான் என்று பேச்சு தொடரும் ..
பிறகு திருமணம் ஆகாதவனாக இருந்தால் கல்லூரி தோழிகள் பற்றி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பது உண்டு ,[ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் ] . பல உள்விவகாரம் இருக்கும் பிறகு ஒரு enquiry போட்டால் சொல்வார்கள் . பாவி மக்கா காலேஜ்யில் படிக்கும் பொழுது அதை பத்தி மூச்சே விட்டிருக்க மட்டார்கள்
அதைவிட முக்கியமானது நண்பர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது .. அவர்களின் திருமணம் வாழ்க்கை .. அவன் குழந்தைகளை பற்றி பேசுவது .. அது ஒரு சொல்ல முடியாத அனுபமாக இருக்கும் .. இதை எல்லாம் பேசி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் அவர்களும் கிளம்பி விடுவார்கள் .. ஒரு 10 மணி நேரத்தில் பத்து வருட கதை பேசுவோம் . பிறகு அவர்களை வழி அனுப்பிவிட்டு நான் ஒரு இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் .கல்லூரி நினைவுகளில் அந்த இரண்டு மணி நேரம் கரையும் .....

3 comments:
Thanks Praba for your good understanding....
those are good feelings. one will forget himself and discussing all the things.
the better background song will be "antha naal nabagam nejilae vantha thea...nanbare, nanbare .....! "
உண்மை தான் சதீஷ் :)
Post a Comment