உறவுகளை விட்டு பிரியும் ஒவ்வொருவரும் வருத்தப்பட ஒரு நேரம் வரும் என்றால் அது நம் உறவுகளின் மறைவு தான் . நேற்று வரை நம் உறவு என்று நினைத்தவர் இன்று இல்லை , அவர்களோடு பழகிய நாட்கள் அவர்களிடம் இருந்த புரிதல் . என்று அவர்கள் விட்டு செல்லும் சுவடுகள் எளிதில் மறப்பது அல்ல
இப்படி பட்ட சூழலில் பிரிவால் வாடுபவர்களுக்கு தொலைபேசியில் துக்கம் விசாரிப்பது என்பது அதை விட கொடுமை . கண்ணிரால் சொல்ல வேண்டிய வலியை வார்த்தையால் சொல்ல முடியாது , சொல்லவும் வார்த்தை வராது , நம் வருத்தத்தை வெளிபடுத்த முடியாத வலி அதை விட ரொம்ப கொடுமை
கண்ணிர் துளி ஒன்று
நாக்கில் பட
சீசீ ஒரே உப்பாக இருக்கிறது
என்றதாம் நாக்கு
அதற்கு கண்கள் சொன்னதாம்
அது தான் என்னிடம் இருந்த
கடைசித்துளி என்றதாம்
பாளைவனத்தில் பயணிக்கும் ஒரு
வழிப்போக்கனின் கண்கள்

இப்படி தான் நம்மில் பலரின் நிலைமை .. ஆறுதல் என்று நாம் சொல்லும் வார்த்தைகள் . நாக்கில் பட்ட கண்ணிர் துளி ஆகி விடக்கூடாது. என்ற பயத்தில் நான் அவர்களை அழைக்கவே மிகவும் தயங்குகிறேன் அதையும் மீறி அழைத்தாலும் வார்த்தைகளை தேடுவதில் போய்விடுகிறது
வார்த்தைகள் தேடுகிறேன்
வலியை சொல்ல
வழி ஒன்றும் தெரியவில்லை
என் கண்ணிர் கதை சொல்ல !
ஓடி வரும் தூரத்தில் நானும் இல்லை !
ஓ என்று அழவும் யாரும் இல்லை !
இப்படி பல தருணங்களில் தேடுகிறேன்
என் வாழ்க்கை பயணத்தை ..