என்ன கேவலம் நடக்கிறது நம்ப ஊரில் ...ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழம் பற்றி கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சனை நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்று சொன்ன மத்திய அரசு இன்று ஏன் இவளவு அக்கறை காட்டுகிறது .. மக்கள் என்ன அவளவு முட்டாள்கள் ஆகிவிட்டார்களா ..
இதற்கு நடுவில் டாக்டர் காலை உணவு உன்ன வேண்டாம் என்று சொன்னதை .. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று மெரினாவில் வந்து அமரும் தலைவன்
ஈழம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மாதிரி தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் தலைவி ..
இந்த ராமதாஸு சரியான பச்சோந்தி, அவன மாதிரி ஒரு பொறம்போக்கை பார்க்கவே முடியாது , கடைசி நாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள் அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பார்களாம் அதையும் நாம் நம்பனும் பன்னாடை ..
இதற்கு நடுவில் சினிமா காமடியன்கள் வேறு [கார்த்திக் ,மன்சூர் அலி கான் , TR, சரத், விஜயகாந்த் அட நாம்ப ரித்திஷ்].. இந்த கேவலம் நம்ப ஊரில் என்றால் வடக்கே இதை விட கொடுமை ..
இங்கிலீஷ் வேண்டம் என்கிறான் ஒருத்தன் ..
இரண்டு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி என்கிறான் ஒருத்தன் . எற்கனவே தமிழ் நாட்டில் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கியாச்சு தேசம் முழுவதையும் கெடுத்துவிடலாம் என்று ஆசை போல
அட நம்ப நக்மா எல்லாம் election நிக்குதாம் நாடு உருப்பட்ட மாதிரித்தான்
அதை விட கொடுமை என்ன என்றால் இவனுக காட்டி இருக்கும் சொத்து மதிப்பை பார்த்திங்களா .. பன்னாடைக 60000 கோடி 40000 கோடி என்று சுருட்டிவிட்டு மூன்று கோடி நாலு கோடி என்று கணக்கு காட்டறாங்க.. இன்னமும் என்ன கொடுமை என்றால் அதையும் நம்ப election commission நம்புவது ,,
என்ன இவனுக எல்லாம் என்ன நினைக்கிறாங்க மக்கள் எல்லாம் கேனப்பசங்க என்றா . இல்லை இவனுக ரொம்ப நல்லவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க என்றா .. போங்க டா பொறம்போக்குகளா ....
இந்த மாதிரி கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் தீவிரவாதிகளும் naxlites களும் உருவாகுகிறார்கள் என்று நினைக்கிறேன் . இந்த மாதிரி சம்பவங்களை பார்க்கும் பொழுது நம்மில் பலருக்கு கடும் கோபம் வரும் ஆனால் என்ன நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக்கொண்டு சும்மா நம் வேலையை பார்க்க போய்விடுகிறோம் , வேலையே இல்லாதவன் என்ன செய்வான் இடுப்பில் குண்டை கட்டிக்கொண்டு தான் திரிவான் ..
நாம் தேசம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வரும் சிந்தனை அவர்களுக்கு கொஞ்சம் கூட வராத ..
பன்னாடை பசங்க இவளவு கொள்ளை அடித்து என்ன பண்ண போறாங்க . என்ன கருமமோ போங்க .. ஒரே கோபம் நாம் ஊர் செய்தியை படித்தால் அது தான் இந்த பதிவு