Thursday, July 1, 2010

Is that foreplay

நித்தி மற்றும் உங்கள் அபிமான ரஞ்சிதா ..


அந்த சரித்திர நிகழ்வு நடந்த பொழுது நான் இந்தியாவில் இருந்தேன் அன்று வெளியே சென்றுவிட்டதால் அந்த நீலப்படத்தை பார்க்க முடியவில்லை . மறு நாள் அபுதாபியில் இருந்து என் நண்பர் அழைத்து விசையத்தை சொன்னார் . அவர் சொன்ன விசையத்தை விட அந்த காவியம் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புவதாக சொன்னார் . எனக்கு ஒரே ஆச்சரியம் செக்ஸ் கல்வியே வேண்டாம் என்ற சொன்ன ஊரில் குழந்தைகள் , பெண்கள் என்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் செக்ஸ் படமா அட தமிழகம் முன்னேறி விட்டதே என்று பெருமைப்பட்டேன் .


என்ன தான் ஒரு மாற்றம் என்றாலும் ஒரு நீலப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பது என்பது ஓனானை எடுத்து வேட்டியில் விட்ட நிலைதான் . ஒரு சாதாரண குடும்பஸ்தர் சம்பவத்தன்று வழக்கம் போல் தொலைக்காட்சியை போட [சூழல் : தனது மனைவி , மகளும் தன்னுடன் இருக்க] அங்கு ஒரு நீலப்படம் ஓடிக்கொண்டு இருந்தால் அவர் மனம் எப்படி இருத்திருக்கும் கஷ்ட காலம் தான் .பிறகு நான் யோசித்து பார்த்தேன் குடும்பத்துடன் பார்க்கும் பொழுது அந்த மகளும் பார்த்து "what they are doing dad ?" என்று கேட்டு இருந்தால் அவர் என்ன சொல்லி இருப்பர் என்று

அந்த சூழலில் எனக்கு தோன்றிய கேள்வி செக்ஸ் கல்வியே குழந்தைகளை கெடுத்துவிடும் என்று சொன்ன நம் சமுதாயம் தான் வீட்டு வரவேற்ப்பு அறையில் குடும்பத்துடன் ஒரு சுமாரான நீலப்படத்தை பார்த்து மகிழும் அளவிற்கு முன்னேறி இருக்கிறதே என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது . இத்தனை நாளாக கலாச்சாரம் , பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இருந்த அந்த சமுதாய காவலர்கள் எங்கே . திரைப்படத்தில் புகை பிடித்தால் சமுதாயம் கெட்டுவிடும் என்று சொன்னன கேனைகள் எங்கே . சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள் தவறு என்று வழக்கு தடர்ந்த முட்டாள்கள் எங்கே .செக்ஸ் கல்வி வேண்டாம் என்று போராட்டம் செய்த பன்னாடைகள் எங்கே . இதை ஒளிபரப்பு செய்தவர்கள் வீட்டு குழந்தைகள் இதே கேள்வியை கேட்டுஇருக்குமே ஆனால் என்ன பதிலாக இருக்கும் “ they are doing foreplay dear என்று சொல்லி இருப்பார்களோ அவர்கள் எல்லாம் படித்த பண்பட்ட சமுதாயம் அயிற்றே , சமுதாயத்தில் எங்கு கொடுமைகள் நடந்தாலும் அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் God Father அல்லவா சொன்னாலும் சொல்வார்கள்


ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழவில்லை அது ஒரு சிறப்பான படம் என்பதாலா இல்லை இத்தனை நாளாக ரகசியமாக பார்த்த ஒன்றை இன்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததாலா என்ன ஒரு கேவலம் . இதற்கு நடுவில் ஒரு எழுத்தாளன் அந்த சாமியாரை பற்றி எழுதி விட்டார் அதற்காக அவரை மனிப்பு கேட்க வைத்த ஒரு தொலைக்காட்சி , அந்த நீல படத்தை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சியை என்ன செய்ய சொல்லி இருக்க வேண்டும் . சொல்ல பயமா இல்லை , இந்த சமுதாயம் என்ன ஆனால் என்ன நம்ப கல்லா கட்டினால் போதும் என்ற சுயநலமா , ஆனால் ஒன்று மட்டும் உண்மை தாங்கள் இரவில் போடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை பகலில் போட்டு விட்டானே என்று வருத்தப்பட்டு இருப்பார்கள் . இந்த சம்பவம் சொல்லும் உண்மை என்ன என்றால் , செக்ஸ் மற்றும் செக்ஸ் கல்விக்கு நாம் மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கு என்று . அரசாங்கம் இதை கவனிக்க வேண்டும்

இதற்கு நடுவில் இணையத்தளத்தில் பல அரவேக்காடுகள் செய்யும் அட்டுழியம் தாங்கமுடியவில்லை . ஓசியில் கிடைத்தால் --------------- செய்யும் மக்கள் . அதை எழுதுவதிலும் , கருத்து தெரிவிப்பதிலும் காட்டுவது வெட்ககேடான செயல் .


இப்படி எழுதுவதால் நான் அந்த சாமியாரையோ அல்லது அந்த நடிகையையோ ஆதரிப்பதாக என்ன வேண்டாம் தவறு என்பது யார் செய்தாலும் தவறு தான் ஆனால் அது ஒருவரை மட்டும் சாடும் பொழுது அதுவும் தவறு தான் . ஆகையால் அந்த இருவர் மட்டும் அல்லாமல் , ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி , மற்றும் தன் சுயநலத்திற்காக கண்டும் காணாமல் இருந்த , இருக்கும் , பத்திரிக்கையும் தான் காரணம் . ஒரு நடிகையை மூன்று மாதமாக பிடிக்க முடியாத காவல் துறையை என்ன சொல்வது .
என்னை பொறுத்த வரை அந்த சாமியாரோ அந்த நடிகையோ வருத்தப்படவோ , வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. செக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தை என்று இருந்த ஒரு சமுதாயத்தில் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி . ஒரு நீலப்படத்தை வரவேற்ப்பு அறைக்கு கொண்டுவந்த பெருமை அந்த படத்தில் தோன்றிய அந்த சாமியாருக்கும் , நடிகைக்கும் தான் . பிறகு இந்த சமுதாய புரட்சியை செய்த அந்த தொலைக்காட்சிக்கு நன்றி .