ரசித்தேன்
தவித்தேன்
பேசினேன்
பாடினேன்
சிந்தித்தேன்
இதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு சித்தன் என்று !!

கவிதைகள் எழுதினேன்
கட்டுரைகள் எழுதினேன்
அதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு கவிஞன் என்று !!
உண்ண மறந்தேன்
உறங்க மறந்தேன்
உடுப்பை மறந்தேன்
இருப்பிடம் மறந்தேன்
நான் யார் என்பதையும் மறந்தேன்
அதை கேட்ட ஒருவன் சொன்னான்
நான் பைத்தியம் என்று !!
காதலிக்க தெரியாதவர்கள் ?
காதலிக்க கற்றுக்கொள் உனக்குளும்
ஒரு கவிஞனும்!
ஒரு சித்தனும்!
ஒரு பைத்தியகாரனும்!
இருக்கிறான் என்பதை நீ உணர்வாய் ....