Tuesday, July 8, 2008

வலி

ஒரு முறை நான் என்னுடன் பணி புரியும் ஒரு நண்பரேடு பேசிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் எனக்கு தெரியும் அவர் பாலஸ்தீனம் என்று , பாலஸ்தீன பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ள அவர் இடம் பேசி கொண்டு இருந்தேன் , அப்பொழுது தான் எனக்கு புரிந்தது புலம் பெயர்ந்தவர்களின் வலி என்னவென்று . அந்த வலியின் சில வார்த்தைகள்




தேசம் விட்டு தேசம் பறக்கும்
பறவைகள் நாங்கள்
இறை தேடி அல்ல
வாழ்கையை தேடி !!!



தாய் வீடு திரும்பும் எங்களுக்கு பெயர்
அகதிகளா !!!



இறைவா உன்னை தான் கேட்கிறேன்
உனக்கு மறதி அதிகமோ


எங்கள் நாட்டில் நாங்கள் வாழ எங்களுக்கு
அனுமதி மறுக்கபபடுவதை
மறந்துவிட்டாய் !


நீ படைத்தது ஒரு முறை தான்
ஆனால் தினமும் நாங்கள் இறக்கிறோமெ
அதையும் தான் நீ
மறந்துவிட்டாய் !

இப்படி நீ உன் பல கடமைகளை
மறந்தாலும் எங்களால்
உன்னை மறக்க முடியவில்லை

7 comments:

Vimal said...

kavithai arumai........but

Tamil Ayya - ungal kavithaiyil eluthu pillai irrukirathu.......

Prabakar said...

Thirutthi kolkiren nandri

Divyapriya said...

//தாய் வீடு திரும்பும் எங்களுக்கு பெயர்
அகதிகளா !!!//

romba azhagaana aazhamaana varigal!

Divyapriya said...

//இறக்கிறோமெ//

spelling paathukkonga...

Prabakar said...

நன்றிங்க திவ்யா !
தவறுகளை திருத்திகொள்கிறேன்

Anonymous said...

prabakar...really great thoughts ...simple but touching

Prabakar said...

nandringa