சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் .
“அப்பா .. அப்பா “ என்றான்
“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..
இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..
.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..
“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..
“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .
“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...
தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு ..
"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...
"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி
"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "
"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "
"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "
"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்
சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....
பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்
“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று
உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார்
“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “
“எல்லாம் நல்ல இருக்காங்க ..”
“என்ன சாப்படறீங்க “
“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “
“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”
“வாங்க வாங்க எப்ப வந்திங்க “
“இப்ப தான்”
“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்
“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “
“அது வந்துங்க …..” என்று இழுத்தார்
“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “
“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “
“வந்து “
“அட சொலுங்க மாப்பிளை”
“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”
“அட அது தான் தெரியுமே .. “
“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “
“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “
“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”
காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”
காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் ..
இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா
இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்
ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .
ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..
அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .
“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .
“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள்
“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..
ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்
“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள்
நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது
மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்
அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்
ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது
வருடங்கள் காத்திருந்த பொழுது
இல்லாத வலி
இந்த நொடிகளில் அனுபவித்தாள்
மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது
கார்த்திக்கின் வீடு இன்று காலை .
பாகம் -2
வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....
ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...
பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..
“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...
“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற
“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “
“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்
இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...