Tuesday, October 28, 2008

தீபாவளி

இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்

மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .

புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .

ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .

என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .

ஒரு பிளாஷ் back .

பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..

அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..

கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..

ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "

No comments: