மாநகராட்சி கழிவரை தொடங்கி
மயான கல்லறை வரை
அப்படி இருந்தும்
இன்னமும்
எத்தனையோ கவிஞர்கள்
சவரம் பண்ணாத முகத்துடன்
டாஸ்மார்க் கடைகளில் !
நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது
பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை
ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .
நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்
கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)