Monday, September 8, 2008

தும் ஹிந்தி மாலும் நகி

ஒவ்வொரு நாளும் நான் நம்ப அரசியால் வாதிகளை திட்டாத நாளே இல்லை

இந்த ஊரில் டாக்ஸி ஏறி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும , அல்லது கடையில் போய் சோறு திங்க வேண்டும் என்றால் , ஹிந்தி தெரிந்தால் மிக மிக சௌகர்யமாக இருக்கும் .. ஏன் என்றால் இங்கு இருப்பவர்களில் பாதி பேர் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால் தான் , அதனால அவர்கள் அனைவரும் நன்றாக ஹிந்தி பேசுவார்கள்

இங்கு டாக்ஸி டிரைவர் எல்லாம் பாகிஸ்தான் காரர்கள் தான் , நமக்கு ஹிந்தி தெரியாது , அவர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது , என்ன செய்வது . இது தான் நான் டாக்ஸி ஏறினால் எனக்கும் அவர்களுக்கு நடக்கும் உரையாடல்


நான் : straight go .... 3 signal after left take then சிதா ஜா parking stop .. (Landmark தெரியவில்லை என்றால் இப்படி தான் சொல்வேன்). இதை கேட்ட அவன் கேட்கும் கேள்வி

டிரைவர் : you Srilanka ? (நம்ப கலரு அப்படி)

நான் : No Indian

டிரைவர் : தும் ஹிந்தி மாலும் நகி ?

நான் : நகி நகி

டிரைவர் : why Hindi no ?

நான் : my leader Hindi strike , so no Hindi

டிரைவர் : thummara rastra batsha Hindi , thum malum nagi ?
(டேய் லூசு பயலே உங்க National Language ஹிந்தி டா என்பான் )

நான் : my leader Hindi strike , so no Hindi only Tamil . I மதராசி....

டிரைவர் : pagal !!! (அடே பைத்தியகாரா !!!)

என்னங்க பண்றது , அவன் சொல்றது உண்மை தானே , நம்ப ஊரை விட்டு வெளியே வந்தால் , நமது மக்களை நாய் கூட சீண்டாது, ஹிந்தி படிக்காத விளைவு இங்கு வந்து தான் உணர்கிரேன் , இந்த கெழட்டு கம்னாட்டி கருணாநிதி ஊரை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு , அவன் பேரண், பேத்திகளை ஹிந்தி படிக்க வைத்து இருக்கான் , பாவி பன்னாடை

எங்க அப்பா அப்பவே சொன்னாரு , நாங்க தான் ஹிந்தி போராட்டம் என்று போய் ஹிந்தி படிக்கலை , நீங்கலாவுது ஒழுங்கா ஹிந்தி படிங்கடா என்று , கேட்டேனா ,,


என்ன பண்றது பட்டால் தானே நமக்கு புத்தி வரும்...

13 comments:

பின்னூட்டம் பெரியசாமி.. said...

அந்த ஓட்டுனர் உங்களைப் பற்றிக் கூறியது சரிதான் போலத் தெரிகிறது.. :)

அவன் பாகிஸ்தானி அல்லது பங்களாதேசி ஓட்டுனர் என்றால் பின்வரும் கேள்வியை அவனிடம் கேட்கவும்..

இந்திய விடுதலை அடைந்த பின் மத வாத பிரிவினையை உருவாக்கி, பாகிஸ்தான் பிரிந்து போனதே. மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் ஒன்றாக இருந்ததே. ஒரே கடவுள் ஒரே மதம். அந்த நாடு உருவாக ஒரே காரணம்.
இவ்வளவு காரணங்கள் இருந்தும் இரண்டு துண்டுகளாக ஏன் பிரிந்து போனது? இதற்கான விடை வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும். பிரிவினைக்குப் பின் மேற்கு பாகிஸ்தான் தங்கள் மொழி யான உருதினை கிழக்கு பாகிஸ்தான் மீது திணிக்க முயற்சித்தது. பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருது மொழி யை அறிவித்தது. எல்லாரும் கூறுவார்கள் இஸ்லாமியர்களுக்கு மொழி இன வேறுபாடு கிடையாது என்றும மதம் மட்டுமே பிரதானம் என்றும்,. ஆனால் மொழியும் இனமும் இரு கண்கள் என்பதை பாகிஸ்தான் பிளவு பட்டதிலிருந்து அறியச் சொல்லுங்கள். இவர்கள் மொழி பற்றால் ஒரு நாட்டையே துண்டாடுவார்களாம். ஆனால் தமிழன் ஆதிக்கம் செய்ய முற்பட்ட இந்தியை எதிர்க்கக் கூடாதாம்.

உங்கள் ஓட்டுனர் இலங்கையைச் சேர்ந்தவரானால் பின்வரும் கேள்வியைக் கேட்கவும். இருபத்தைந்து ஆண்டுகாலமாக தமிழர் தரப்பிலும் சிங்களர் தரப்பிலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறதே ஏன்? இவர்களுக்கு மொழியும் இனமும் முக்கியம் இல்லை என்றாகிப் போனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விட வேண்டியது தானே? உங்கள் ஓட்டுனர் சிங்களனாக இருந்தால் அவனிடம் தமிழரை தாக்கும் சிங்கள ராணுவத்தை பின்வாங்கச் சொல்லலாமே? தமிழருக்கு உள்ள உரிமைகளை வழங்கச் சொல்லலாமே? கட்டாயக் குடியேற்றங்களை நிறுத்தச் சொல்லலாமே?

இன்னும் கொஞ்சம்..
நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் எதிலும் இந்தி ஆட்சி மொழி அல்ல இந்தியாவைத் தவிர.
பாகிஸ்தான் - உருது மற்ற மொழிகள் சிந்தி மற்றும் பஞ்சாபி.
பங்களாதேஷ் - வங்காளம்
இலங்கை - தமிழ் மற்றும் சிங்களம்.
நேபாள் - நேபாளம்.

இவர்கள் எல்லோரும் பிறகு எப்படி இந்தி பேசுகிறார்கள்? ( சிங்களம் கூட ஒரியாவைப் போன்று பாலி மொழியில் இருந்து வந்தது.) மற்ற நாடுகளில் உள்ள மொழிகள் வட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதிக ஒற்றுமை உள்ளவை. இதே போல நீங்களும் திராவிட மொழிகளின் தாயான தமிழ் அறிந்து உள்ளீர்கள். தமிழுடன் ஒற்றுமையுள்ள அல்லது தமிழில் இருந்து பிறந்த மொழிகளான மலையாளம் ,தெலுங்கு, கன்னட மொழிகள் உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்கு மற்ற மொழிகளைக் கற்க ஆர்வம் உள்ளதா?உங்களுக்கு ஆர்வம் இருந்தால்..

உண்மையிலேயே தமிழகத்தில் எந்த மொழியையும் கற்கவும் பேசவோ தடையே இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்திட கல்வி வியாபாரிகளுடன் இன்னும் போராடிக் கொடிருக்கின்றனர் என்பதே உண்மை. எந்த மொழிப் புத்தகங்களும் பாடங்களும் தமிழ் நாட்டில் தடை செய்யப் படவில்லை. தமிழ் வழிக் கல்வியை இன்னும் ஆரம்பப் பள்ளி அளவில் கூட முழுமை செய்திடவில்லை.

எனவே தன்னார்வத்தை வளர்த்து அதன் மூலம் ஆயிரம் மொழிகளைக் கற்போம். பள்ளிகளில் பாடங்களை நம் தாய் மொழியான தமிழிலேயே கற்போம்.தமிழிலேயே பேசுவோம். மொழியும் இனமும் நம் அடையாளங்கள். அதைத் தொலைத்த பின் நாம் நாடோடிகள். மொழியைக் காப்போம் .இனத்துடன் சேர்வோம்.

Prabakar Samiyappan said...

இவளவு பெரிய முக்கிய வரலாற்று உண்மையை தெரியாமல் இருந்தது பைத்தியகார தனமாக இருக்கலாம் . ஆனால் நமக்கு நம் தேசிய மொழி தெரியவில்லை என்பது தான் உண்மை அதை ஒத்துகொள்ள வேண்டும் ...

ஒரு மொழியை கற்க ஆர்வம் மட்டும் போதும் என்ற கருத்து உண்மை தான் ..
ஆனால் அதை கற்கும் வாய்ப்பும் அமைய வேண்டும் அல்லவா . ஆங்கிலத்தையே தமிழில் கற்கும் நம் மக்களுக்கு .. ஹிந்தி படிக்க வாய்ப்புகள் எங்கே

உங்கள் வருகைக்கும் .. உங்கள் கருத்துக்கும் மிக நன்றி .. பெரியசாமி

vimalnath said...

Prabakar - unga feelinguthan enakum.......but nanbar periya samy karuthu.......konjam alla romba kuthi katuthu.........irruthalum oru hindi figura pickup pannina.......seekaram katru kollalam enpathu en karuthu.........

பின்னூட்டம் பெரியசாமி.. said...

வாய்ப்பு இல்லாமல் போனதற்கும் நேரமில்லாமல் போனதற்கும் நம் அரசியல்வாதிகளை திட்ட வேண்டியது இல்லை. சொல்லப் போனால் இன்னும் தமிழ் வழி கல்வியை தமிழகத்தில் கொண்டு வருவதில் தயக்கம் மற்றும் சுணக்கம் காட்டுவதால் வேண்டுமானால் திட்டலாம். இந்தியாவின் தேசிய இனங்கள் 18. இதில் தேசிய மொழிக்கான தகுதியில் தமிழ் கிஞ்சிற்றும் குறைந்தது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய மொழிகள் இருக்கக் கூடாததும் அல்ல. தமிழையும் இந்திய தேசிய மொழியாக ஏன் ஆக்கக் கூடாது?

@ vimalnath
// oru hindi figura pickup pannina.......seekaram katru kollalam enpathu en karuthu.........//

இது உண்மையிலேயே நல்ல யோசனை.. ;-)
பரிசீலிக்கவும்..

Prabakar Samiyappan said...

நண்பா விமல் வருகைக்கு மிக நன்றி .. ஹிஹி
public லே இப் படி எல்லாம் சொல்ல புடாது ...

Prabakar Samiyappan said...

//
oru hindi figura pickup pannina.......seekaram katru kollalam enpathu en karuthu.........

//
நண்பர் விமல் மற்றும் பெரியசாமியின் கருத்து பரிசீலிக்கபடும் ஹிஹி ..

vimalnath said...

Master........namba ellam idam porul eval eppa parthu pesi irukoom........unga student allava..........thaiyyai pola pillai (masterai pola sisyan) ha ha ha........Nanbar periyasamy entha area........

பின்னூட்டம் பெரியசாமி.. said...

எதுக்கு நண்பா.. ஆட்டோ அனுப்பவா? ஆட்டோவெல்லாம் வரமுடியாத இடத்திலே இருந்தாதானே இப்பிடியெல்லாம் பின்னூட்ட முடியும். ;-)

Divya said...

iyooo I am not able to post tamil comment in this pop up comment page,
can u pls remove this option, plsss pretty plss

Prabakar Samiyappan said...

Ya i had removed that option

Prabakar Samiyappan said...

//
எதுக்கு நண்பா.. ஆட்டோ அனுப்பவா?
//

அண்ணே பெரியசாமி அண்ணே .. கவலை பட வேண்டாம் அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது நான் கேரண்டி ஹி ஹி

charu said...

when i travelled hongkong,dubai,u.k. i realised the fact not knowing hindi is a great handicap. most of the shop owners in hongkong, u,k, are northindians. in dubai workers , taxi drivers speak hindi only.believing the words of tamil leaders iopposed studing hindi.but leaders son , studying hindi as 3 rd laungage.now i felt mistake of not studying hindi.

Prabakar said...

Thanks Charu , On seeing this name itself i felt very happy .do you know why my dream writer name is also charu ..

its happy to see to again here