Saturday, October 11, 2008

கரை தேடும் கப்பல்- 1

ஐயா சாமி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் .. என்னவென்றால் ..............................
அட கொஞ்சம் struck ஆகுது ......

ஹிம் ஓகே

அட நில்லுங்க அப்பா ஒரு பில்டப் வேண்டாமா ....

ஐயா சாமியோ சாமியோ நானும் ஒரு தொடர் கதை எழுதறேன் அதனால இந்த பிளாக்கர் உலகத்தின் சுஜாதாகளே , அனு ராதாகளே ... என்னை மனித்து விடுங்கள் ...படித்துவிட்டு என்னை திட்ட வேண்டும் என்றால் அப்படியே கமெண்ட்ஸில் திட்டிவிட்டு போங்க .சூனா பானா இருந்தாலும் .நான் அதுக்கு எல்லாம் பயபடுகிற ஆளு இல்லைங்க சாமியோ ....

here goes ......

மணி : வெள்ளி கிழமை 6:45 PM

"ஏய் நீ எங்கே இருக்க "

"office லே .."

"ஏய் லூசு ..9:30 க்கு train .. இன்னமும் என்ன பண்ற .. "

"ஏய்.. ஏய்.. கெளம்பிட்டேன் .. சின்ன ஒரு status மெயில் அனுப்பிட்டு வந்துடறேன் "

"சீக்கிரம் கெளம்பு டி ..என்னோமா இவதான் office யையே தாங்கி புடிக்கிற மாதிரி பேசறா .. "

"ஓகே சீக்கிரம் வா .. ரூம்க்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே .."

"ஓகே ஓகே பாய் .."

போனை வைத்தான் கார்த்திக் ...

ஊருக்கு செல்வதற்காக தன் துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் ...

[கார்த்திக் ஒரு சிவில் Engineer , சென்னையில் உள்ள ஒரு construction கம்பனியில் வேலைசெய்கிறான் ..சொந்த ஊரு ஈரோடு பக்கத்தில் உள்ள கொடுமுடி .]

மணி : 7:30 PM

"ஏய் கார்த்தி நான் ரூம்க்கு வந்து விட்டேன் .. ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடு "என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ரஞ்ஜனி ..

[ரஞ்ஜனி சாப்ட்வேர் அனலிஸ்ட் ..வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் , சொந்த ஊரு ஈரோடு ]

அப்படி இப்படி என்று ஒரு 8 மணிக்கு பேபி நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு , விஜய் நகரில் உள்ள ரஞ்ஜனி வீட்டின் முன் ஆட்டோவில் போய் நின்றான் கார்த்திக் ... அங்கு ரெடியாக இருந்த ரஞ்ஜனியை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலை நோக்கி ஆட்டோ சென்றது ...

"சாப்பிட்டியா "

"இல்லை .சென்ட்ரல் போய் சரவணபவனில் பார்சல் வாங்கிக்கொள்ளலாம் ... " என்றான் கார்த்திக்

"ஓகே .."

சிரிது நேரம் மௌனத்திற்கு பிறகு கார்த்திக் .. தொடங்கினான் ..

"இந்தத்தடவை உங்க அப்பாக்கிட்ட பேசப்போறியா இல்லையா ..."
ரஞ்ஜனியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை ...

"-------------------"

அதற்குள் ஆட்டோ அண்ணா மேம்பாலத்தை நெருங்கிவிட்டது ...மீண்டும் ஒரு முறை கேட்டான் கார்த்திக் ..

"பார்ப்போம் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னால் ரஞ்ஜனி ..
"---------------------------"

பார்ப்போம் என்றால் என்ன அர்த்தம் ....

"--------------------------"

அதற்குள் சென்ட்ரல் ஜெயில் பாலம் வந்து விட்டது

"சார் காசு எடுத்து வெச்சுக்கோங்க சார் அங்க நிக்க விட மாட்டானுகோ ..."என்றான் ஆட்டோகாரன் ...

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஆட்டோ நின்றதும் ..
ஆட்டோகாரர்யிடம் காசை கொடுத்து விட்டு .. இருவரும் train யை நோக்கி நடந்தார்கள் மணி சரியாக 9 PM

"ரஞ்ஜனி நீ train க்கு போ நான் போய் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துறேன் ..."

"ஹா ஓகே "

"கார்த்திக் எந்த கோச் ..."

"S9 --24, 25 "

"ஓகே நான் அங்க வெயிட் பண்றேன் ..."

"ஓகே "

ஏர்காடு எக்ஸ்பிரஸ் எந்த platform என்று பார்த்தல் ரஞ்சனி .. மூன்றாவது platform என்றதும் .. s9 கோச்யை நோக்கி நடந்தால்....

s9 கோச்யை அடைந்ததும் .. தங்கள் இருக்கையை பார்த்து அமர்ந்தால் .....

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து .. ஆட்டோவில் வரும் பொழுது கார்த்திக் கேட்ட கேள்வியை ...நினைத்து கொண்டு இருந்தாள் ......

சற்று நேரத்தில் " ஹலோ " என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .. திரும்பி பார்த்தால் ..கார்த்திக் ..

"என்ன பலமா யோசனை ..."

"இல்லை ..ஆட்டோவில் வரும் பொழுது நீ சொன்னதை தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் .."

"சரி வா சாப்பிடலாம்" ...

சாப்பிட்டுக்கொண்டே இருவரும் பேசினார்கள் அதற்குள் ரயிலும் கெளம்பியது ...

"சரி என்ன பண்ண போற .."

"நான் தான் ஏற்கனவே எங்க வீட்டில் சொல்லிட்டேன் ...உன் கூட பேசினாவே தொலைச்சுடுவேன் என்று சொல்லி இருக்கிறார் எங்க அப்பா .. என்னை என்ன பண்ண சொல்ற "

"ஓகே அப்புறம் என்ன தான் பண்ண போற "

"நான் என்ன பண்ணுவேன் !"

"ஆமாம் எப்போ கேட்டாலும் இதை ஒன்ன சொல்லிடு ..." என்று சலித்துக்கொண்டான்

"அப்புறம் என்னை .. என்ன ஓடி வர சொல்றியா !!.."

"அது இல்லை டி "

"அப்புறம் என்ன "

"இல்லை உங்க அம்மா பேசப்போறாங்கனு சொன்னியே என்ன ஆச்சு ..."

"ஆமாம் .. எங்க அம்மா பேச்சை மட்டும் எங்க அப்பா கேட்கவா போறாங்க ..."

"அப்புறம் என்ன தான் பண்றது ..."

"பார்ப்போம் ..."

" எண்ணத்தை பார்ப்போம் ...... சும்மா எப்பக்கேட்டாலும் பார்ப்போம் பார்ப்போம் என்று பதில் " என்று சலித்துக்கொண்டான்

அதற்குள் பேஸின் பாலத்தை தாண்டி விட்டது train , தங்கள் compartment யில் இருந்த மற்றவர்கள் உறங்க செல்ல இவர்களும் தங்கள் .. இருக்கையில் படுத்துக்கொன்றார்கள் .. சரியாக காலை 6 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தது train ...

train யை விட்டு இறங்கி ....subway யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள் ....subway யை விட்டு வெளியே வந்த பொழுது எதிரில் ரஞ்ஜனியின் அப்பா ...

"ஏன்டா என் புள்ளைக்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேனே ..அப்புறம் என்னடா பேச்சு ....."

"இல்லைங்க ......"

என்று சொல்லி முடிப்பதற்குள் .. பளார் பளார் என்று அறை விழுந்தது கார்த்திக்கு ...

"டேய் மச்சி ஆபீஸ் வந்துடிச்சு டா எந்திரி டா " என்று எழுப்பி விட்டான் செந்தில் .. [ இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு ரஞ்ஜனி சென்னை திரும்பவில்லை ...]

தன் இருக்கைக்கு வந்த கார்த்திக் தனது INBOX ஐ திறந்து பார்த்தான் . இரண்டு மூன்று மெயில் தன் PM யிடம் இருந்து வந்து இருந்தது ...மற்றும் பல forwarded மெயில் ...இது அனைத்திற்கும் நடுவில் ..ரஞ்சனியிடம் இருந்து ஒரு மெயில் ...நொடி பொழுதில் திறந்த அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து இருந்தது ...

அன்புள்ள கார்த்திக்கு ,

நீ எப்படி இருக்கா , ..அன்று நடந்த சம்பவத்தற்கு நான் மிகவும் வருத்த படுகிறேன் . அந்த நாளுக்கு பிறகு , என்னை விட்டில் யாரும் நம்புவது இல்லை ,, என்னை தனியே எங்கும் அனுப்புவது இல்லை . செத்து விடலாம் போல் இருக்கிறது ....என்னை எப்படியாவுது அழைத்து சென்று விடு ........இல்லை என்றால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது..

உயிர் இல்லா
பிணமாக !
உன்னை மனதில்
சுமந்து கொண்டு !
பெற்றவர்களுக்கும் உண்மை யாக இல்லாமல்
உனக்கும் தொல்லை கொடுப்பது
கரை தெரியாத கடலில்
நீந்து வது போல் இருக்கிறது
நான் கரை சேர்வதும்
கடலோடு போவதும்
உன் வார்த்தையில்
தான் இருக்கிறது

----காதலுடன்
ரஞ்ஜனி
இதை படித்த கார்த்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .. சற்றும் யோசிக்காமல் .
(தொடரும் ................)

9 comments:

Anonymous said...

hmmm..good start

kalakku machee..

Prabakar said...

நன்றி பிரபு

Anonymous said...

really a great initiative ....u have good talent ...don't stop it for any reason ....! flow roomba nalla iruku ....oru chinna suggestion ....matha masala kathai maatheree ...mokkai suspense yellam vaikaama rasikumbadiyaana suspense vaiyungal..! ithuvarai yethuvum antha maathere illai....i am sayign for the future !!

Prabakar said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சதிஷ் ..

தங்களை போன்ற வாசகர்களின் ஊக்கமும், உற்சாகமும் என்னை எழுத துண்டுகிறது .. தங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று நினைக்கிறேன் :)

Divya said...

Dialogues are so nice..........kavithai ellam potu kalakiteenga:))

Hats off!!

Prabakar said...

நன்றிங்க திவ்யா ..

Anonymous said...

ரொம்ப சூப்பர் ஆ கதை எல்லாம் எழுதுறீங்க அண்ணா!!!
கிரேட் கலக்றீங்க!!!டயலாக் எல்லாம் ரொம்ப சூப்பர்.

Unknown said...

ரொம்ப சூப்பர் ஆ கதை எல்லாம் எழுதுறீங்க அண்ணா!!!
கிரேட் கலக்றீங்க!!!டயலாக் எல்லாம் ரொம்ப சூப்பர்.

Prabakar said...

thangal varugakkum , valtthukkum Nandri Neya :)