என் உயிர் ரஞ்ஜனி ,
நான் நலம் தான் , நீ வருத்தப்படாதே அன்று நடந்த சம்பவத்தை பற்றி நான் வருத்தப்படவில்லை ... ஏன் என்றால் அது பெற்றவர்களின் ஆதங்கம் ... ஆனாலும் ஒரு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது .. அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன்
உயிரை விடுவது நீயாக இருந்தாலும்
பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்
இதில் வேடிக்கை என்ன தெரியுமா
நம்மை பிரித்த
உன் அண்ணனுக்கோ பிரிவின்
வலி தெரியவில்லை
உன் அப்பனுக்கோ
பிள்ளை மனம் புரியவில்லை
சாதி சனம் எல்லாம் ஒண்ணு தான்
ஆனால் மாமன் மச்சான்
மல்லு கட்டிக்கிட்டு
மனசு எறங்க மாட்டேங்றாங்க
கண்ணே காதலில்
எப்பொழுதும்
பிள்ளை மனம் பித்து
பெற்ற மனம் கல்லு தான்
காலம் கனிந்து வரும் காத்திரு
கண் மணியே !
---காதலுடன்
கார்த்திக்
இந்த மெயிலை அனுப்பினா கையேடு .. இரண்டு நாளுக்கு விடுப்புக்கு விண்ணப்பித்தான்.. தன் சொந்த காரணங்களுக்காக என்றான் நாகரிகம் கருதி அவன் சைட் மேனேஜரும் அதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை .. அதன் பிறகு விஜயலக்ஷ்மி Travels க்கு அழைத்து அன்று இரவுக்கு ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் புக் செய்தான் [வார தொடக்கம் என்பதால் டிக்கெட்டும் இருந்தது ]... இரவு 9: 30 க்கு திநகர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பஸ் புறப்படும் என்றான் எதிர்முனையில் .
"சரி நான் வந்து விடுகி்றேன் என்று சொல்லிவிட்டு . "போனை வைத்த அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை ...
இது அத்தனையும் கவனித்து கொண்டு இருந்த .. அவன் நண்பன் செந்தில் ...
"மச்சி வா ஒரு தம் போட்டுட்டு வரலாம் .. " என்றான் ..
வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான் கார்த்திக் ..
"டேய் what’s the problem man ? காலையில் இருந்து ஒரே tension ஆ இருக்க ..."
"இல்லை டா மச்சி ஒன்னும் இல்லை .."
"ஒன்னும் இல்லாமதான் ரெண்டு நாள் லீவ் apply பண்ணினையோ..."
"..............."
"டேய் எதாவுது பேசு டா ..."
".................."
அதற்குள் தம்மு கடை வந்து விட்டது ..
"அண்ணா ரெண்டு கிங்ஸ் , ரெண்டு ஹால்ஸ்,, ஒரு வாட்டர் பாக்கெட் " .. என்றான் .. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு பின்னால் சென்றார்கள் ..
ஹால்ஸ்யை வாயில் போட்டுக்கொண்டு .. சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அப்படியே பேச்சை தொடாங்கினான் செந்தில்
"டேய் இப்படி ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன டா அர்தம்.. எதனாவுது சொல்லு டா .. "
"இல்லை டா ஒண்ணும் இல்லை .."
"எதுவும் இல்லாம தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உட்காந்து இருக்க .."
"இல்லை டா அது வந்து ரஞ்ஜனி அவுங்க அப்பா மறுபடியும் problem பண்றாரு டா"
"என்ன சொல்றாரு . மாமா .."
"வேற மாப்பிளை பாக்கராரு.."
"எல்லாமும் தெரிந்தே ஏன்டா அந்த ஆளு இப்படி பண்றான் ஏன்டா உங்க மாமா என்ன நிறைய தமிழ் படம் பார்ப்பாரோ .. "
"எல்லாம் ஒரு வீராப்பு தான் " ஹும் என்ன நடக்கும்னு தெரியல டா அது தான் நாளைக்கு ஊருக்கு போறேன் , அப்பாக்கிட்ட சொல்லி ,, பெரிய அப்பாக்கிட்ட பேச சொல்லி இருக்கேன் .. பெரியப்பா சொன்னா ரஞ்ஜனி அவுங்க அப்பா கொஞ்சம் கேட்பாரு அது தான் .. "
"ஏன்டா இதுக்கு தான் காலையில் இருந்து இளவு வீட்டில் உட்காந்து இருக்கிற மாதிரி உக்காந்து இருக்கையோ .."
"கூல் டா " மச்சி ஒண்ணும் கவலை படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அப்படியும் இல்லை என்றால் ஒரு action plan யை போடுவோம்
அந்த மாதிரி எல்லாம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் .
அப்படியே வேண்டும் என்றாலும் சொல்லு டா மச்சி
"தேங்க்ஸ் டா .." ..
வாட்டர் பாக்கெட் எடுத்து கையையும் வாயையும் கழுவிக்கொண்டு .. கடைகாரரிடம் அண்ணா account என்று சொல்லி விட்டு .. தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள் இருவரும் ...
மீண்டும் தன் கணினியை திறந்து .. அப்படி இப்படி என்று நெளிந்ததில் மணி 12: 30 ஆனது .. சாப்பிட சென்று விட்டு ஒரு 2 மணி சுமாருக்கு வந்து அவன் பார்த்துக்கொண்டு இருந்த சில முக்கியமான வேலையை .. செந்திலிடம் கொடுத்து விட்டு .. நாலு மணி சுமாரில் செந்திலிடமும் தன் சைட் மேனேஜர்யிடம் சொல்லிவிட்டு .. தன் அறைக்கு கிளம்பினான் கார்த்திக்
இரவு 8 மணிக்கு கிளம்பி ஒரு 9 மணி அளவில் திநகர் வந்து சேர்ந்தான் ..திநகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள .. கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு .. விஜயலக்ஷ்மி travels முன்பாக சென்ற பொது .. பஸ்சும் சரியாக வந்தது .. பஸ்ஸில் ஏறி தன் இருக்கையை பார்த்து அமர்ந்தான் ...
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் .. தூங்கி விட்டான் ..காலை 5 : 45 க்கு ஈரோடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தது ..அங்கு இறங்கி .. தன் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து வீடு போய் சேர 8 மணி ஆனது .. அதற்குள் பழனிச்சாமி பெரியப்பாவும், சித்தப்பாவும் வந்து இருந்தார்கள் வீட்டில் ஒரே கூட்டம் ...
வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு .பெரும் அதிர்ச்சி ..
4 comments:
"உயிரை விடுவது நீயாக இருந்தாலும்
பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்" ...!
Really touching lines .... most times love seems to be silly ...but the silly things gives the happiness..the real happiness.
Story seems to go in a good path ....and interesting ...keep witting..:)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதீஷ்
Wow........thodar kathai kalakala irukku Prabhakar!!
Flow is really good.......keep going:)))
நன்றிங்க திவ்யா .. ஏதோ என்னால முடிந்தது :) :) .. தொடர் கதை எழுதுவதின் கஸ்டம் இப்ப தான் தெரியுது :)
Post a Comment