நேற்று காலை ரஞ்ஜனி வீடு
கார்த்திக்கு மெயில் அனுப்பிவிட்டு . ரஞ்ஜனி தன் அம்மாவை தேடினால் , அம்மா சமையல் அறையில் இருப்பது தெரிந்தது .அம்மாவிடம் சென்று ...
"அம்மா உன் கூட பேசணும் "
"-----------------------"
"அம்மா உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் "
"தெரியுது சொல்லு "
"இங்க வா .."
"என்னடி வேணும் சொல்லு ... சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்லே"எதோ சொல்ல தயங்கினாள் ..
"அம்மா "
"அட சொல்லு "
"அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன் "
"-----------------"
தன் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவராக ரஞ்ஜனியை பார்த்தார் . [ரஞ்ஜனியின் வீட்டிற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பல வருடங்களாக குடும்ப பகை , அதன் காரணமாக தான் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு]
"என்னடி சொல்ற ... என்ன பைத்தியம் கித்தியம் பிடிச்சிடுச்சா ... "
"இல்லை அம்மா நான் முடிவு பண்ணிட்டேன் "
"என்னத்த முடிவு பண்ணிட்ட .. முடிவு பண்ணிட்டாலம் முடிவு "
"எங்கடி வந்திச்சு இந்த தைரியம் "
"உங்க அப்பா காதில் கேட்ட என்ன ஆகும் தெரியும்லே " என்று சொல்லி விட்டு அழ தொடங்கினார் ..
அதற்குள் ரஞ்ஜனி தன் அறைக்கு திம்பினாள் .. அவள் அம்மாவும் ஏதோ சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தார் .இதை அத்தனையும் பொருட்படுத்தாமல் .. தன் துணியை எடுத்து வைத்தால் ரஞ்ஜனி ..
"அடி பாவி நான் இங்க பொலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடி நா துணியை எடுத்து வெச்சுக்கிட்டு இருக்க "
"அம்மா நான் ஒண்ணும் ஓடி போகல , நான் என் மாமா விட்டுக்கு தான் போறேன் ..எனக்கு மாமாங்கிறதை விட உன் அண்ணன் விட்டுக்கு தான் போறேன் "
"அடியே அது இல்லடி பிரச்சனை .. உங்க அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் "
"நான் அதை பத்தி கவலை படலை "
"அய்யோ என்ன பேச்சிடி பேசற .. "
"உனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது "
".........................."
"அய்யோ நான் என்ன பண்ணுவேன் .. நான் பெத்தவளும் என் பேச்சை கேட்க மாட்டென்கிறாள் .. கட்டிக்கிட்டவனும் என் பேச்ச கேடக மாட்டென்கிறான் நான் என்ன தான் பண்ணுவேன் .... "
"அம்மா சும்மா இரும்மா... பொலம்பாத .. "
"ஏண்டி நான் பேசறது உனக்கு பொலம்பற மாதிரி இருக்க ... அய்யோ சாமி மகமாயி நீ தான்பா காப்பாத்தனும்"...
" சரி அம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வறேன் "
"அடியே நெசமா தான் செல்றியா... .... "
"அப்புறம் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் "
"அடியே வேண்டாம்டி.. உங்க அப்பன் வந்தா.. பிரச்சனை ஆவுன்டி "
"என்ன பிரச்சனை ஆனாலும் பார்த்துக்கிறேன் "
"அடியே நில்லுடி வயக்காட்டுக்கு போயி இருக்க உங்க அப்பா வந்தரட்டும் "
"வந்த அவரு மட்டும் என்ன சொல்ல போறாரு .. வேண்டாமுன்னு தான் சொல்ல போறாரு " என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..அவள் அண்ணன் விட்டுற்குள் நுழைந்தான் ..
".................................."
ரஞ்ஜனியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை ..இருவரும் அமைதியாக இருந்தார்கள் . அவள் அண்ணனுக்கோ சூழ்நிலையின் காட்டம் தெரிந்தது ஆனால் அவனால் என்ன என்று யூகிக்க முடியவில்லை .
என்ன பிரச்சனை என்று ரஞ்ஜனியை முறைத்துக்கொண்டே தான் அம்மாவிடம் கேட்டான்
முந்தானியால் வாயை அடைத்துக்கொண்டு ரஞ்ஜனியை பார்த்துக்கொண்டே மீண்டும் அழ தொடங்கினார் அவள் அம்மா .
அவள் அண்ணனுக்கோ இருப்புகொள்ளவில்லை .."என்ன தான் பிரச்சனை என்று கத்தினான் "
"………………………..................."
" கேட்கறேன்ல என்ன தான் பிரச்சனை”
"நான் மாமா வீட்டுக்கு போறேன்”
"என்னது மாமா வீட்டிக்கு போரையா”
"ஓ நீங்க அந்த அளவுக்கு பெரிய மனுசங்க அயிட்டிங்க ...."
“-------------------------------------“சிறிது நேரம் வெறும் மௌனத்திர்கு பிறகு அவள் அண்ணா கேட்டான்
“அப்பா கிட்ட சொன்னியா .. “ என்றான்
"இல்லை " என்று தயங்கி தயங்கி சொன்னாள்
"உனக்கு அப்பா அம்மாவை விட அவுங்க தான் பெருசா போயிடுச்சு இல்லை..."
"இங்க பாரு எப்ப நீ அந்த விட்டுக்கு போறேண்ணு முடிவு பண்ணிட்டையோ இங்க இருக்க கூடாது .. கெளம்பு நீ கெளம்பு "
"இல்லை அண்ணா அது வந்து .."
"என்ன அது வந்து போய் ..."
" கெளம்பு நீ முதலில் கெளம்பு "
"நாளைக்கு எதாவது எங்களை பற்றி செய்தி கேட்டினா ஒரு எட்டி வந்து பாத்துட்டு போ " என்றான் ரஞ்ஜனியின் அண்ணன் தழு தழுத்த குரலுடன்
"அண்ணா " என்று அழ தொடங்கினாள் ரஞ்ஜனி
சிறிது நேரத்தில் வயக்காட்டுக்கு சென்று இருந்த அவள் அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் . நடந்ததை எல்லாம் தான் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிட்டார் .கேட்டுவிட்டு எதுவும் பேசவில்லை ..
ரஞ்ஜனியை ஒரு முறை பார்த்தார் . அந்த பார்வை ரஞ்ஜனிக்கு புதுமையாக இருந்தது அதன் அர்த்தம் புரியாதவளாக நின்றாள் ரஞ்ஜனி .
இறுகி போன முகத்துடன் .நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா…
(தொடரும் .....)
4 comments:
appavuku nenju vali ..second attack...appadeenu sollidaatheenga.....expect something unusual....
keep writing ...!
நன்றி சதீஷ் :) :) நிச்சியமாக அப்படி இருக்காது :)
Hi There I'd love to thank you for such a great made forum!
Was thinking this is a nice way to make my first post!
Sincerely,
Johnie Maverick
if you're ever bored check out my site!
[url=http://www.partyopedia.com/articles/unicorn-party-supplies.html]unicorn Party Supplies[/url].
Post a Comment