Wednesday, September 17, 2008

என் வாழ்க்கை -- காலை மாலை இரவு

காலை
செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது
ஒவ்வொரு நாளும்

வாழ்க்கை எங்கே செல்கிறது
என்று தெரியவில்லை ஆனால்,
கால்கள் மட்டும்
என் அலுவலகம் செல்கிறது

சிறிதுநேரத்தில்
என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து
முகம் தெரியாத முதலாளியின்
கனவை
நினைவாக்க சென்று விடுகிறேன் ...

மாலை
பல நாட்களில்
மணி ஆனது தெரியாமல்
moniter யிடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..

இரவு
வீடு திரும்பும்போது
மீண்டும் வாழ்க்கை பற்றிய சிந்தனை ..
அதற்குள் எனக்குள் தூங்கிக்கொண்டு
இருந்த லக்சிய சித்தனும்
கொள்கை கோமாலியும்
என் முன் சென்று
என்னை மானம் கெட திட்டுவார்கள்
அதற்குள் வீடு வந்து விடும்

சிறிது நேரத்தில்
உணவு அருந்திவிட்டு உறங்க சென்றால் ,
மற்றும் சிறிது நேரத்தில்
செல் போன் சிணுங்க தொடங்கும்
அடுத்த நாள் காலையில் ....

சரோஜா

முந்தாநேத்து இரவு எங்கள் ரூமிற்கு ஒரு புது நபர் வந்தார் ..பார்த்த உடனே அனைவருக்கும் ஒரே பரபரப்பு ... அவன் அவன் ஒரு பேரு வெச்சான் ..மல்லு ரசிகர் மன்றத்தில் இருந்து மீரா என்றும் ,, இன்னொருத்தன் மீனா என்றான் .. செரி நம்ப பங்கிற்கு நாமலும் ஒரு பேரு வைப்போமே என்று .. சரோஜா என்று வைத்தேன்


[ அப்போ தான் சரோஜா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த effect ]..


அதை பார்த்த உடனே ஒருத்தன் .. ஆப்பிள் எடுக்கிறான் .. இன்னொருத்தன் காரட் குடுக்கிறான் ....சிறிது நேரம் அதை சுத்தியே எல்லோரும் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம் ..



ஒருத்தன் இது நல்லா பேசும் டா என்றான் இன்னொருத்தன் நல்லா பாடும் என்றான் .. அதுக்குள்ளே தூக்கம் வர ..அதுக்கு ஒரு இடத்தை கொடுத்துட்டு .. அவன் அவன் தூங்க சென்றுவிட்டோம்


காலை 6 மணிக்கு ... கீ கீ னு கத்த தொடங்கிவிட்டது அட நம்ப சரோஜா தாங்க .. என்ன கொடுமை டா இதுன்னு ..




"டேய் அதுக்கு எவனாவுது சாப்பாடு குடுங்கடா என்றால் எவனும் எழுந்திரிக்கவில்லை ..."


அட பாவமே என்று நினைத்துக்கொண்டு காதை அடைத்து கொண்டேன் .. அதுக்குள் ஒரு நல்ல மனுசன் காரட் கொடுத்தாரு


அப்புறம் ஒரு 8 மணிக்கு கிளம்பி .. office க்கு சென்றுவிட்டோம் மத்தியம் வந்து பார்த்த சரோஜாவை காணவில்லை .. எங்கட என்று கேட்டால் .. நண்பர் ஒருத்தர் கேட்டாரு கொடுத்து விட்டேன் என்றார் ..


செரி ஓகே .. என்று சொல்லிவிட்டு .. வேலையை பார்க்க சென்றுவிட்டோம் ..


அட இன்னைக்கு office இருந்து வந்து பார்த்தால் .. மீண்டும் கீ கீ சத்தம் ரூம்லே . என்ன என்று கேட்டால் . நேத்து அவங்க விட்டில் காலை 5 மணிக்கே கீ கீ ஆரம்பமாம் .....

Friday, September 12, 2008

ஹமாம் operator ராசு- 1



நான் கேட்டதில் ரசித்த உண்மை சம்பவம் ....
நம்ப ஹீரோ பேரு ராசு , இவரு , தென் தமிழ்நாட்டில் இருந்து வந்து துபாய்யில் வேலை செய்யும் ஒரு ஹமாம் operator,

துபாய் வந்த பிறகு கல்யாண மார்கெட்டில் நம்ப ராசுவிர்க்கு மௌசு அதிகம் ஆகிவிட்டது . அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது , ஒரு முறை விட்டிற்க்கு அழைத்த அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்து தங்களது தூரத்து உறவில் ஒரு பெண் இருப்பதாகவும் சீர் செனத்தி சிறப்பாக செய்வார்கள் என்று ராசுவின் அம்மா கூறினார் .

பிறகு நாட்கள் உருண்டன இரண்டு வாரத்தில் தன் அம்மா அன்று சொன்ன அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார் . இரண்டு நாளில் கொரியரும் வந்து சேர்ந்தது .பிரித்து பார்த்த அவனுக்கு வயித்துக்குள் பட்டாம்புச்சி பறக்க தொடங்கியது தனது சமதத்தை தன் அம்மாவிடம் சொன்னான் . அதேபோல் அந்த பெண்ணுக்கும் அதே biological மாற்றம் ஏற்பட . .பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு தேதியில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள் . அப்படியும் கல்யானத்துக்கு இரண்டு மாதம் இருத்தது ....
அப்பொழுது ராசுவிற்கும் அந்த பெண்ணுக்கும்

பசி இலலை


தூக்கம் இல்லை


நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகினா


நாட்கள் ஒவ்வொன்றும் நரகம் ஆகியது


கிரகாம் பில் அவன் குல தெய்வம் ஆனார்


missed call ஒவ்வொன்றும் மில்லியன் டாலேர் அவனுக்கு

(அட இது எல்லாம் இந்த Situation க்கு மிக அவசியங்க )

பிறகு அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடியது , பிறகு ஒரு நாள் தன் அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது , திறந்து பார்த்தால் அவனது கல்யாண பத்திரிக்கை , அவன் நண்பர்களுக்கு குடுக்க தன் அம்மா அனுப்பியதாக சொன்னார் . பத்திரிக்கையை திறந்து பார்த்த அவனுக்கு கடும் கோபம், அதை வாங்கி பார்த்த அவனது நண்பர்கள் அடக்கமுடியாமல் சிரித்தார்கள் கேளியும் , கிண்டலும் ராசுவை சூடேத்தியது .



பிறகு என்ன.. தன் அம்மாவிற்கு போனை போட்டு காச் மூச் என்று கத்தினான் , ஏன் ஹமாம் Operator என்று பத்திரிகையில் போட்டிர்கள் என்று கத்தினான் .

அதற்க்கு அவன் அம்மா சொன்ன பதில் "செய்யும் தொழிலே தெய்வம் டா .. அது ஒன்னும் தப்பு இல்லை நீ அங்க அந்த வேலை பார்த்து கஷ்ட படுவது தான் நாங்க இங்க மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் ".. என்று தான் அம்மா சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் ராசு

ஹமாம் என்றால் அரபிக்யில் கக்குஸ் (Toilet) என்று அருத்தம் . இதை கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது நம்ப வடிவேல் தான் ...

Thursday, September 11, 2008

என் உயிர் காதலி

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் மாமன் மகன்

Tuesday, September 9, 2008

காதலி







எனக்குள் நீ

உனக்குள் நான்

என்றும்.


என்றும்

எனக்கு இருக்கும்

ஒரே பதவி

உன் காதலன்

Monday, September 8, 2008

தும் ஹிந்தி மாலும் நகி

ஒவ்வொரு நாளும் நான் நம்ப அரசியால் வாதிகளை திட்டாத நாளே இல்லை

இந்த ஊரில் டாக்ஸி ஏறி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும , அல்லது கடையில் போய் சோறு திங்க வேண்டும் என்றால் , ஹிந்தி தெரிந்தால் மிக மிக சௌகர்யமாக இருக்கும் .. ஏன் என்றால் இங்கு இருப்பவர்களில் பாதி பேர் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால் தான் , அதனால அவர்கள் அனைவரும் நன்றாக ஹிந்தி பேசுவார்கள்

இங்கு டாக்ஸி டிரைவர் எல்லாம் பாகிஸ்தான் காரர்கள் தான் , நமக்கு ஹிந்தி தெரியாது , அவர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது , என்ன செய்வது . இது தான் நான் டாக்ஸி ஏறினால் எனக்கும் அவர்களுக்கு நடக்கும் உரையாடல்


நான் : straight go .... 3 signal after left take then சிதா ஜா parking stop .. (Landmark தெரியவில்லை என்றால் இப்படி தான் சொல்வேன்). இதை கேட்ட அவன் கேட்கும் கேள்வி

டிரைவர் : you Srilanka ? (நம்ப கலரு அப்படி)

நான் : No Indian

டிரைவர் : தும் ஹிந்தி மாலும் நகி ?

நான் : நகி நகி

டிரைவர் : why Hindi no ?

நான் : my leader Hindi strike , so no Hindi

டிரைவர் : thummara rastra batsha Hindi , thum malum nagi ?
(டேய் லூசு பயலே உங்க National Language ஹிந்தி டா என்பான் )

நான் : my leader Hindi strike , so no Hindi only Tamil . I மதராசி....

டிரைவர் : pagal !!! (அடே பைத்தியகாரா !!!)

என்னங்க பண்றது , அவன் சொல்றது உண்மை தானே , நம்ப ஊரை விட்டு வெளியே வந்தால் , நமது மக்களை நாய் கூட சீண்டாது, ஹிந்தி படிக்காத விளைவு இங்கு வந்து தான் உணர்கிரேன் , இந்த கெழட்டு கம்னாட்டி கருணாநிதி ஊரை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு , அவன் பேரண், பேத்திகளை ஹிந்தி படிக்க வைத்து இருக்கான் , பாவி பன்னாடை

எங்க அப்பா அப்பவே சொன்னாரு , நாங்க தான் ஹிந்தி போராட்டம் என்று போய் ஹிந்தி படிக்கலை , நீங்கலாவுது ஒழுங்கா ஹிந்தி படிங்கடா என்று , கேட்டேனா ,,


என்ன பண்றது பட்டால் தானே நமக்கு புத்தி வரும்...

Sunday, September 7, 2008

உன் பார்வையில்

பல வருடங்கள் முன்பு நாங்கள் மூன்று நண்பர்கள் ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு , பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கையெந்தி பவனில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு நண்பார் எதுத்த மாதிரி இருந்த ஒரு மிக பெரிய மருந்து கடையை பார்த்து சொன்னான் மச்சி சரியான பிசினஸ் டா ..இங்க atleast ஒரு நாளைக்கு ஐம்பது ஆயிரம் பிசினஸ் நடக்கும் டா என்றான் .....

நானும் ஓஹோ ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு . omelet உண்பதில் மும்முரமாக இருந்தேன்...

இந்த நாண்பன் சொன்னதை சற்றும் கவனிக்காத இன்னொரு நாண்பன் சொன்னான்

இச்ச மக்களுக்கு எவளவு நோய் பாருடா ..

எவளவு மருந்து இதை அத்தனையும் நாம் தானே சாப்பிடுகிறோம் இச்ச பாவம் டா என்றான் ...

நான் அவனை சற்று வியப்புடன் பார்த்தான் !!

அப்பொழுது தான் "எல்லாமே நீ பார்க்கிற பார்வையில் தான் இருக்கு டா என்று என்றோ ஒரு நாள் யாரோ சொன்னது ஞபகம் வந்தது "

அது உண்மை தான் இப்பவும் பல சூல்நிலையில் எனக்கு இது உதவுகிறது