Sunday, September 28, 2008

FAKE EXPERIENCE போடுபவர்கள் எல்லாம் கோட்சேவும் இல்லை போடாதவர்கள் எல்லாம் காந்தியும் இல்லை

சென்ற வாரத்தில் என் நண்பர் ஒருவருக்கு வேலை போய்விட்டது , அவர் இதற்கும் அந்த கம்பனியில் கடந்த இரண்டு வருடமாக வேலை செய்கிறார் , அவர் செய்த ஒரு தவறு ஒரு மாதம் தனது experience யை சேத்தி போட்டது . இந்த சம்பவம் என்னை மிகவும் யேசிக்க செய்தது ..


எதற்காக தூக்கினார்கள் fake போட்ட காரணத்தால இல்லை ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால ,அவர் வேலை செய்யவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது ஏன் என்றால் இரண்டு வருடம் அவர் அங்கு தான் வேலை செய்கிறார் ,நன்றாக வேலை செய்யாவிட்டால் என்றோ தூக்கியிருப்பார்கள். அப்படி என்றால் அந்த ஒரு மாதம் fake போட்டது தான் காரணமா என்றால்..

ஆமாம் ..


பொய் சொல்வது தவறு என்றால் , முதலில் நீங்கள் சேய்வது எல்லாம் சரியா . மாத சம்பளம் 20000 ஆயிரம் 25000 ஆயிரம் என்று கொடுக்கும் நீங்கள் பண்ணும் billing சமாச்சாரம் எல்லாம் உங்கள் உழியர்க்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்


இதற்கு fake போட்டுபவர்கள் எல்லாம் சுலபமாக வேலை வாங்கிவிடுவதாக நினைத்து விட வேண்டாம் , அவர்களும் பல கட்ட invterview யை கடந்து தான் அந்த வேலைக்கு வருகிறார்கள் , இல்லாத ஒன்றை இருப்பது போல் பேசுவது தான் மிகவும் கடினம் . இதில் பொய் சொல்வதை விட சொன்ன பொய்யை maintain பண்ணுவது மிக கொடுமை :) .


ஆகையால் நண்பர்களே Fake போடுவது சுலபம் இல்லை, original experience இருகிறவன் செய்வதை விட fake போட்டவன் அதிக வேலை செய்வான், அதுவும் மிக திறமையாக . இது தான் உண்மை ஏன் என்றால் . அவனுக்கு அந்த வேலையின் மதிப்பு நன்றாக தெரியும் , அந்த மதிப்பு தான் ஒரு software engineer என்று சொல்லிகொள்வது அல்ல, . ஏங்கே நாம் தெரியவில்லை என்று சொன்னால் தன்னை fake என்று கண்டு பிடித்துவிடுவர்காலோ என்ற பயம் என்றும் அவனுக்கு இருக்கும் . அது தான் அவனை மேலும் மேலும் படிக்க தூண்டும் ..


எத்தனை வருடம் என்று பார்காமல் வேலை இல்லாதவர்களை எல்லாம் fresher யாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை ..
[தப்பு செய்பவனை விட தப்பு செய்ய தூண்டுபவனுக்கு தான் தண்டனை அதிகம் தர வேண்டும் அப்படி என்றால் software கம்பனிக்கு தான் தண்டனை அதிகம் ]


இந்த கொடுமை எல்லாம் software துறையில் மட்டும் தான் . fake யை பற்றி இவளவு பேசும் company கள் எல்லாம் ப்ராஜெக்ட் வாங்க என்ன செய்கிறது , fresher யை கூட இரண்டு வருடம் மூன்று வருடம் experience போட்டு client யிடம் காட்டித்தான் bill பனுவார்கள் , கம்பெனி செய்தால் அது management technique அதே ஒரு தனி நபர் செய்தால் அது தப்பு ...இது எந்த விதத்தில் ஞாயம் .


நானும் ஒரு கம்பெனி யில் interview panel லில் இருந்திருக்கிறேன் . பல original experience இருக்கும் நபர்களையும் interview செய்திருக்கிறேன் , fake experience இருப்பவர்களையும் interview செய்திருக்கிறேன்.. fake experience இருப்பவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் .. இதில் என்ன வேடிக்கை என்றால் original experience இருப்பவர்களை விட fake experience இருப்பவர்கள் நன்றாக பதில் அளிப்பார்கள், பல சமையம் அவர்கள் fake என்று தெரிந்தே எடுப்பேன் , எதற்காக தெரியுமா அவர்கள் அடிப்படை டெக்னாலஜியில் மிகவும் தெளிவாகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் , அவர்களுக்கு இருக்கும் ஒரே குறைபாடு lack of domain knowledge , அது அவர்கள் வேலை செய்தால் மட்டும் தான் வரும் , அதுவும் வேலைக்கு வந்தவுடன் சுலபமாக கற்றுக்கொள்வார்கள் .



fake போட்டவர்களை எடுப்பது தவறு தான் ஆனால் அதற்காக நான் ஒரு பொது வருத்தப்பட்டது இல்லை ஏன் என்றால் , client க்கு தேவையான வேலையை தரமாக டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் செய்துவிடுவேன் . அது தானே கம்பனிக்கு வேண்டும் ,நான் பணி செய்தது சாதரண ஒரு இந்தியன் கம்பெனி


இதில் என்னொரு வேடிக்கையை சொல்கிறேன் . இப்பொழுது பல கம்பனியில் மேனேஜர் பதவியில் இருக்கும் பலர் y2k பிரச்சனை தலை தூக்கிய பொழுது இந்த துறைக்கு வந்தார்கள் , அதுவும் குறிப்பாக 1996 முதல் 2000 வரையில் யான காலக்கட்டத்தில் .. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் mainframe படித்துவிட்டு ஒரு fake experiance போட்டுக்கொண்டு அவர்கள் எல்லாம் அமெரிக்கா சென்றார்கள் . அப்பொழுது சுழ்நிலை அப்படி இருந்தது , பிறகு என்ன 2000 த்திர்க்கு பிறகு அவர்கள் எல்லாம் துரத்தி அடிக்கப்பட்டார்கள் அது வேற கதை .. அந்த மாதிரி மேனேஜர் எல்லாம் இப்பொழுது காந்தி மாதிரி பேசுகிறார்கள் . என்ன கொடுமைங்க இது

இவர்களின் மனைவிமார்கள் சிலர் திருமணத்தின் பொழுது வேலை இல்லாமல் இருப்பார்கள் அதன் பிறகு எதாவுது ஒரு கோர்ஸ் படிப்பது அதன் பிறகு தங்கள் கணவரின் நண்பர்கள் வேலை செய்யும் எதாவுது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள் , கேட்டால் இவர்கள் தான் work ethic , loyalty என்று பினத்துவர்கள் அட போங்க ஐயா ,,


இந்த மேனேஜர் தான் இப்படி என்றால் இந்த HR பத்தி சொல்கிறேன் கேளுங்கள் ,, தங்களுக்கு தெரிந்தவன் என்றால் தங்கள் நண்பர்கள் இருக்கும் panel க்கு அனுப்புவது , அந்த panel லில் இருப்பவர்க்கும் இவருக்கும் ஒரு under ground understanding போகும் , பிறகு என்ன அந்த நண்பர் CV forward செய்தல் சுலபமாக வேலை நடக்கும் , இந்த மாதிரி HR தான் என்று பல verification நடத்துகிறார்கள் .. முதலில் இவர்களை verification செய்ய வேண்டும்


இப்படி எல்லாம் இருக்கும் சூல்நிலையில் entry level employee மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இது எப்படி இருக்கிறது தெரியுமா , கோடி கோடியாய் ஊழல் பண்ணும் அரசியல் வாதியை விட்டு விட்டு , இந்த ஜட்டி திருடினவன் , கோழி முட்டை திருடினவன் பிடிக்கும் நம் போலீஸ் மாதிரி இருக்கு உங்கள் வெளக்கெண்ணை பாலிசி


இதற்காக fake போடுவது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் இந்த தவறுக்கான முடிவு கம்பனிகள் கையில் தான் இருக்கிறது .படித்து முடித்து ஒரு வருடம் ஆனா காரணத்தால் நீங்கள் எல்லாம் fresher இல்லை உங்களுக்கு வேலையும் இல்லை, என்ற காரணத்தால் தான் அவர்கள் fake போடும் சூழலுக்கு தள்ளபடுகிறார்கள் , ஆகையால் நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது கம்பெனிகளின் கையில் தான் இருக்கிறது . இல்லை என்றால் fake போடுபவர்களை உங்களால் என்றும் தடுக்க முடியாது . "இவளவு பேசும் நானும் காந்தியும் இல்லை கோட்சேவும் இல்லை "

4 comments:

Vimal said...

Sir.......sir..........sir......sir.........Enaku software engg. velai kidaikuma sir..........neenga feel panuratha partha........antha ninaipey varapidathu pola............

Prabakar said...

நண்பா விமல் உன்ன மாதிரி ஆளுக எல்லாம் தாண்ட எவளவு பிரச்சனை பண்றது ..

செல்லாது செல்லாது ..

Anonymous said...

நிறைய பேர் நினைக்கின்றதை அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

(தமிழ் குறிப்பு: நிறைய இடத்தில் இரண்டு மெய் எழுத்துக்களை ஒன்றாக எழுதியுள்ளீர்கள், அவ்வாறு வாராது என நினைக்கிறேன். Ex.எதற்க்காக)

Malar

Prabakar said...

நன்றிங்க மலர் ..தவறுகளை திருத்திக்கொள்கிறேன் ..