Saturday, September 27, 2008

ராசு in துபாய் ..

இது ராசு முதல் முதலில் துபாய் வந்த கதை ...


திருச்சியில் இருந்து முதல் முதலில் flight ஏறுகிறார் ,அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அது கொழும்பு சென்றுவிட்டு அங்கு இருந்து மூன்று மணி நேரம் tansit க்கு பிறகு அபு தாபி வந்து சேறும் . நம்ப ராசுவும் கொழும்புவில் இருந்து அபு தாபி வரும் விமானத்தில் ஏறிவிட்டார் .. விமானம் பறக்க தொடங்கி விட்டது .. விமான பணி பெண் சரக்கு எடுத்து வர நம்ப ராசு நல்ல பிள்ளை மாதிரி அமர்ந்து இருந்தார் .


பக்கத்தில் இருந்த அறிவாளி நம்ப ராசுவை பார்த்து விட்டு .. சரக்கு எல்லாம் ஓசி தான் , நம்ப டிக்கெட் காசில் சரக்கும் சேத்திதான் வாங்கி இருக்கான் .. சும்மா வாங்கி குடிங்க என்று சொல்ல ..


"நெசமாவா .. எனக்கு சொல்லவே இல்லை " என்று சொல்லி விட்டு .. கச்சேரியை தொடங்கினார் ராசு ..


சிறிது நேரத்தில் அலப்பறை தாங்க முடியாமல் போக .. பணி பெண் ஊசி போட்டு .. சீரிய சிங்கத்தை அடக்கினார்கள் ..


விமானம் அபு தாபி வந்து சேர்ந்ததும் , பக்கத்தில் இருந்த அறிவாளி ராசுவை எழுப்பிவிட ..


"சிரித்துக்கொண்டே கொஞ்சம் ஓவரோ .."


"ஆமாம் ஆமாம் .." என்றான் ராசு ..


இப்பொழுதுதான் பெறும் அதிர்ச்சி காத்து இருந்தது ரசுவிர்க்கு ..


"ஆமாம் நீங்க துபாய் தானே போகவேண்டும் என்று சொன்னிங்க .. நீங்க ஏன் அபு தாபிக்கு வந்திங்க .. துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடு .." என்று அறிவாளி சொல்ல நம்ப ரசுவிர்க்கு .. ஒரு லார்ஜ் யை ராவா அடித்து போல் இருந்தது ..


"ஐயா சாமி என்ன சொல்றிங்க .."


"அட தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு ஏறவேண்டியது தானே .. அட போயா இப்போ என்ன பண்ண போற , இந்த நாட்டில் சட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப கண்டிசன் . பாத்து வேற விமானத்தை பிடித்து துபாய் போற வழியை பாரு "என்று சொல்லிவிட்டு நம்ப அறிவாளி எஸ்கேப் ..


ரசுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை ..



கண்களில் கண்ணிர் , இக்கத்தில் ஒரு மஞ்ச பை , கையில் ஒரு பை .. திருவிழாவில் தொலைந்த திருவாத்தான் போல் நிற்க ..


ராசுவின் அலப்பறையை விமானத்தில் பார்த்த ஒரு நல்ல மனுஷன் ..


"என்ன தம்பி என்ன ஆச்சு என்று கேட்க .."


"ஐயா சாமி இந்த மாதிரி தப்பு நடந்து போச்சு .எங்க அப்பன் ஆத்தா காடு கண்ணை வித்து துபாய் அனுப்பி வெச்சாங்க நான் தெரியா தனமா இந்த நாட்டுக்கு வந்துட்டேன் எதாவுது பண்ணுங்க ஐயா என்று கேட்க .."


"யாரு யா சொன்னா துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடுன்னு ரெண்டு ஒன்னு தான் எங்கே உன் passport யை காட்டு என்று வாங்கி அவன் விசாவை பார்த்து விட்டு ஒரு பெறும் விளக்கம் சொல்லி ராசுவை தேற்றினார் "


இதனால கருத்து கந்தசாமி என்ன சொல்றான் என்றால் " உதவி செய்யாவிட்டலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் "

2 comments:

Anonymous said...

நகைச்சுவையுடன் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!

\\திருவிழாவில் தொலைந்த திருவாத்தான் போல் நிற்க ..\

மீண்டும் ஒரு முறை படித்து சிரித்தேன் இவ்வரிகளை:)))

Prabakar said...

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க