Friday, September 26, 2008

NRI வாழ்க்கை

முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் குழந்தையும்
விடுமுறைக்காக தாயகம் சென்று வரும் NRI யும் ஒன்றுதான் !

ஒரு ஒற்றுமை " பிரிவு "
ஆனால் ஒரு சிறு வேறுபாடு

ஒருவரின் பிரிவு மணிகணக்கில்
மற்றொருவரின் பிரிவு வருடகணக்கில்

ஒருவர் வாழ்க்கையை தொடங்குகிறார்
மற்றொருவர் வாழ்க்கையை தொலைக்கிறார்

குழைந்தையின் தேடல் மகிழ்ச்சி
NRI யின் தேடல் பணம் , பதவி , பெருமை !
இதற்க்கு முக்கிய காரணம் கடமை
அந்த கடமையின் விளைவு

தந்தை முகம் மறந்த குழந்தைகள்
பிள்ளை முகம் பார்க்க ஏங்கும் தந்தை ..

பிரிவின் வலி உனக்கு மட்டும் இல்லை
எனக்கும் தான் என்று அறுதல் கூறும் மனைவி

என்ன ஒரு வாழ்க்கை என்று நினைக்கும் போது
கண்முன் வது நிற்கும் அந்த கடமை ..

இப்படி நாட்கள் நகர்ந்தது
மாதங்கள் கடந்து
வருடங்கள் ஓடின ..

ஆனால் வாழ்க்கை மட்டும்
ஒரே இடத்தில் சம்மணம் கால் போட்டு அமர்ந்தது !!

நன்றாக படிக்காதவன் எல்லாம்
நிம்மதியாக உள்ளுரில் இருக்கிறான்..

படித்த காரணத்தால் ,
தாய் தந்தை விட்டு ,
சகோதர சகோதரிகளை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
பழகிய நண்பர்களை விட்டு
அந்நிய தேசத்தில் அனாதைகள் ஆனோம்

இதையே உள்ளுரில் இருப்பவனிடம் சொன்னால்
அட போட .. உள்ளுரில் இருந்து
என்ன சுகத்தை கண்டோம் என்றான்
" இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை "
மனதை தேற்றிக்கொள்ள அருமையான வார்த்தை

10 comments:

Vimal said...

Nan romba feel pannitenpa........intha software payanuku ivalu ariva.......unnai ninacha enaku romba perumaiya irruku........

Prabakar said...

நண்பா ரொம்ப feel பண்ணாதே ஹி ஹி

tamilraja said...

இத வச்சு காமடி கீமடி பண்ணலியே!
நாம ஏதோ பீல் பண்ண கமென்ட் என்னமோ கைப்புள்ள ரேஞ்சுக்கு இருக்கு அதான்!

Prabakar said...

நண்பா தமிழ் , இந்த மாதிரி பல கஷ்டமான விசையங்களை .நகை சுவையாக எடுத்துக்கொண்டால் தான் வாழ்க்கை . Easy யாக இருக்கும்

so no over feelings .

முரளிகண்ணன் said...

\\ உள்ளுரில் இருந்துஎன்ன சுகத்தை கண்டோம் \\

சேம்பிளட்

Prabakar said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி முரளி

Anonymous said...

வாவ்.....ரொம்ப அட்டகாசமா இருக்கு ப்ரபாஹர்,
மிக அழகா NRI's மனநிலையை விவரித்து எழுதியிருக்கிறீங்க!!

அருமை!!

Prabakar said...

வாழ்த்துக்கு வருகைக்கும் ரொம்ப நன்றிங்க ..

Anonymous said...

good presentation .... and comparison.... :) continue panunga prabakar....

Prabakar said...

நன்றி சதிஷ்